
ஒரு கோடை நீட்டித்து
உன்னை உருவாக்கிவிட முடியும்
இரு கால்களை தாங்கி
கொம்புகளை
பற்றி மேல் சுழித்தால்
ஒரு விடயமும்
கீழ் சுழித்தால் ஒரு விடயமும்
சொல்லாய் உருமாறுமெனில்
விரல் பிடித்து
கொம்புகளையும்
கோடுகளையும்
வரையறுக்கத் தெரிந்த
அந்த ஒரு சொல்லுக்கு மட்டும்
மிகப்பெரிய
கொம்புகளும்
கால்களும்
சுழிகளும் நிறைவாகத்தான்
வரையறுக்கப்பட்டுள்ளது
அன்பெனும் சொற்களுக்கும்
எல்லாமாகிடும் சொற்களுக்கும்
சற்று வெற்றிடம் அதிகம் தான்
அந்த ஒரு சொல்லிற்கு....!
கவிஞர் சே கார்கவி



0 Comments