Ticker

6/recent/ticker-posts

தொலைதல்!


தொலைந்தது குறித்து
காவல் நிலையத்தில் 
புகார் கொடுத்தாயிற்று.

புகைப்படம் 
தொலைந்த இடம் 
அப்போது அணிந்திருந்த 
ஆடை 
அங்க அடையாளங்கள்

நிறம் 
உயரம்
கொண்டு சேர்க்க வேண்டிய 
இடம் 
தகவல் தர வேண்டிய 
தொலைப்பேசி எண்கள்

வருந்தும் உள்ளங்கள்
சன்மானத் தொகையென 
அனைத்தும் அறிவித்தாயிற்று
விரைவில்
கண்டெடுங்கள் என்னை.
           
ஆக்கம் 
பாரியன்பன் நாகராஜன்
குடியாத்தம் - 632602
கைப்பேசி: 9443139353

Post a Comment

0 Comments