கேள்வி ;எனது வயது 21 நான் திருமணமாகிய, வது நாளே எனது திரு மாணவாழ்க்கை முற்றுப்பெற்று விட்டது காரணம் நான் ஏற்கனவே தவறாக இது எனது தாயாதித்தன்மையை இழந்து விட்டதாக கூறி எனது கணவர் எனதுன ன றுப்பிரிந்து விட்டார் நான் எந்தத் தவறும் செய்யமால் தண்டிக் தடியட்நாத்தான் தினமும் தூக்கமின்றி நொதியற்று வேதனைப்பட்டி கொன், அருந்ததினாறேன் இந்தக் கன்னித்தன்மைகள் பற்றி விளக்கமாகச் சுரங்கள்
அசாராரா, நாகத்துறை,
பதில் : கன்னித்தன்மை என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்கம் தொகுதியின் நுழைவாயிலில் இருக்கக்கூடிய ஒரு மென்மையான படலமாகும் (Membrane). இது கன்னிச்சவ்வு (Hymen) எனக்குறிப்பி டப்படும்.
இந்தக் கன்னிச் சவ்வின் அமைப்பு எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி யாக இருப்பதில்லை . அல்லது ஒரு சில பெண்களுக்கு இது முற்றாக பிறப்பி லேயே இருக்காது என்ற விடயத்தை நாம் ஒவ்வொருவரும் தெரிந்திருந்தால் தான் மேற்கூறிய பெண்மணி கூறியது போன்று பரிதாப நிலையில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம்.
இந்த விடயம் குறித்து நாம் எல் லோரும் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும் என்பதால் விரிவாக எழு தலாம் என நினைக்கின்றேன். Hymen எனப்படும் இந்த அமைப்பானது இங்குள்ள படத்தில் குறிப்பிடப்படுவது போல் பெண்ணுக்கு பெண் வித்தியாசப் படலாம்.
இது அனேகமாக பெண்களுக்கு ஒரு சல்லடை போன்ற ஒரு அமைப்பாக இருந்தாலும் ஒரு சிலருக்கு வட்டவடிவ மாகவோ அல்லது முக்கோண அல்லது நாற்கோண வடிவாகவோ இருக்கலாம், இந்தத் துவாரங்களினூடாகவே மாத விடாய் ஏற்படுகின்றது மற்றும் ஒரு சில பெண்களுக்கு இந்தக் கன்னிச்சவ்வு பிறப்பிலேயே இருக்காது. ஏனையோ ருக்கு முதல் உடலுறவின்போது தான் இவை உடைந்து இல்லாமல் போகின்றன. இதன்போது ஓரளவுக்கு இரத்தம் வெளியேறும்.
Also read MORE... ஆரோக்கியம்
திருமணம் நடந்து முதலிரவின்போது ஒரு வெள்ளைத்துணியை கொடுத்து இரத்தக்கறை பட்டிருக்கிறதா? இல் லையா? என்பதை வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை பார்ப் பதும் இன்றும் ஒரு சில கிராமங்களில் வழக்கமாக உள்ளது.
உண்மையிலேயே இது இஸ்லாம் உட் பட எந்தவொரு சமயத்திலும் கூறப்ப டாத அல்லது மருத்துவ ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அநாகரீகச்செயல் என்றே கூறவேண்டும்.
ஒரு சில கிராமங்களில் திருமணத் திற்கு அடுத்த நாள் மாப்பிள்ளை வீட் டார்கள் சென்று திருமண தினத்தன்று இரவு கொடுக்கப்பட்ட துணியில் இரத் தக்கறை இருக்கின்றதா எனப்பார்க்கவும் செய்கிறார்கள். எமது முன்னோர்கள் அறிமுகப்படுத்திய பல மூடத்தனமான . விடயங்களில் ஒன்று என்றும் இதைச் சொல்லலாம்.
நான் ஏற்கனவே கூறியபடி பிறப்பிலே Hymen இல்லாதவர்களுக்கும் முக்கோண அல்லது நாற்கோண வடிவில் Hyrmen இருப்பவர்களுக்கும் இரத்தக்கறை இருக் காது என்பதுதான் உண்மை . மேலும் ஒரு சில பெண்களுக்கு பிறப்பில் இருந்தாலும் சைக்கிள் ஓட்டம், விளையாட்டுக் களில் ஈடுபட்டிருத்தல் போன்ற கார ணங்களினால் Hymen உடையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
எமது சமூகத்தில் இருக்கக்கூடிய இந்த நடைமுறையினால் இக்கேள்வியை அனுப்பிய சகோதரி மாத்திரமன்றி பல இளம் பெண்களின் திருமண வாழ்க்கை ஒரு சில நாட்களில் முடிவுற்று விதவை என்ற முத்திரை குத்தப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ உள்ளன.
இந்த விடயத்தில் மாப்பிள்ளையை விட அவரின் வீட்டார்களே அதிக அக் கறை கொண்டுள்ளனர்.
உலகில் உள்ள உயிரினங்களில் மனித குலத்திற்கு மாத்திரம் இறைவனால் அரு ளப்பட்ட நன்கொடை தான் திருமண வாழ்க்கை .
எனவே, அல்லாஹ்வின் இந்த ஏற்பாட் டுக்கு மாறாக இதுபோன்ற மூட நம்பிக் கைகளை வைத்து தலாக் அல்லது விவா கரத்து எடுப்பது அல்லது மற்றவர்கள் விவாகரத்து எடுப்பதற்கு உறுதுணையாக நிற்பது அல்லாஹ்வின் ஏற்பாட்டுக்கு எதிரானது என்பதை நாம் ஒவ்வொரு வரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அண்மையில் நாம் திருமண வாய்ப்பும் இஸ்லாமும் என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்த கருத்த ரங்கில் ஆண்களுக்கு மாத்திரம் பிரத் தியேகமாக ஒரு கலந்துரையாடலை வைத்து கன்னித்தன்மையை பார்த்தல் நடைமுறைக்கு ஒவ்வாத விடயம் என்பதை எமது சமூகத்திற்கு கொண்டு செல்லும்படியும் இந்த நடைமுறை உள்ள கிராமங்களில் குத்பாக்கள் மூலம் இந்த விடயத்தை தெளிவுப்படுத்தும்படியும் வேண்டினோம்.
இது சம்பந்தமாக வேறு யாருக்கேனும் எமது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு மேலும் இது சம்பந்தமாக தகவல்கள் தேவைப்பட்டால் நாம் தெளிவுப்படுத்த தயாராக உள்ளோம்.
DR.NASEEM
0 Comments