உத்திரபிரதேசத்தில் 9 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் கடந்தாண்டு ஜுன் மாதம், கரும்பு தோட்டத்தில் பெண்ணின் கழுத்து, சேலையால் நெரிக்கப்பட்டு, ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், அடுத்தடுத்து மாதங்களில் இதே போல் பெண்கள் கொல்லப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. நவம்பர் மாதம் வரை 8 கொலை நடந்துள்ளது. இந்த அனைத்து கொலைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட அனைவரும் அவர்கள் அணிந்திருந்த சேலையால் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அத்தனைப் பேரின் உடலும் கரும்புத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட அனைவரும் பெண்கள். குறிப்பாக 40-65 வயதுக்குட்பட்டவர்கள்.
இதை தவிர வேறு எந்த தகவலும் கிடைக்காத நிலையில், ஆபரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 காவலர்களை கொண்டு 14 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சீருடை அணிந்தும், மப்டி உடையிலும் கொலைகள் நடந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு வேறு எந்தக் கொலைகளும் நடக்கவில்லை. குற்றவாளியம் சிக்கவில்லை.
இந்நிலையில், ஜூலை 2ம் தேதி, புஜியா ஜாகிர் பகுதியை சேர்ந்த அனிதா(45) என்பவர், ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அவரை தேடி அலைந்த பெற்றோர் எங்கும் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, அங்கிருந்த கரும்புத் தோட்டத்தில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதனால், போலீசார் விரைந்து சென்றபோது, அனிதாவும் சேலையால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு, கரும்பு தோட்டத்தில் சடலமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், உள்ளூர்வாசிகள் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கொலையாளியின் பென்சில் ஓவியத்தை வரைந்து, அதை வைத்து தேடுதலைத் தீவிரப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். இந்த நிலையில், நவாபன்ஞ் மாவட்டம் கங்காவர் பகுதியில் வைத்து குல்தீப் என்ற சீரியல் கொலையாளியை கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் தான் 6 பெண்களைக் கொலைசெய்ததாக ஒப்புக்கொண்டுள்ள குல்தீப், திருமணம் ஆன குறுகிய காலத்திலேயே குல்தீப்பின் மனைவி அவனை விட்டுச் சென்றுள்ளதால் பெண்களின் மீது குல்தீப்புக்கு வெறுப்பு உருவாகி அதுவே கொலை செய்ய காரணமாக அமைந்துள்ளது. தனியாகச் சிக்கிய அந்த பெண்கள் உடலுறவுக்கு மறுக்கவே அவர்களை குல்தீப் கொலை செய்துள்ளான். குல்தீப்பிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
ibctamilnadu
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments