Ticker

6/recent/ticker-posts

அரங்கேறாத ஆசை (உரை நடைக் கவிதை)


என்னால் முடியாத 
ஒவ்வொன்றையும் 
கேட்டு அடம் பிடித்துக் கோபக் 
குடை பிடிக்கின்றாயே
மடமைப் பெண்ணே
இவை நடை முறைக்கு 
ஆகாதடி கண்ணே

என்னிடம் அவள் 
அடம் பிடித்தவை 
என்னவென்று புரியாமல் 
நின்று முழிக்கின்றீர்களா? 
ஒவ்வொன்றாய் நான் 
உரைத்தால் திரும்பி 
முறைக்காமல் செவி 
சாய்ப்பீர்களா?

அவள் கண்ணுறங்க 
விண்ணுலகம் சென்று 
வெண்பஞ்சு மேகம் கொண்டு 
வரவேண்டும் 
என்று குதித்து நின்றாள்

மின் தடை நேரம் 
வான் வரை சென்று 
நட்சத்திரம் கொண்டு வா 
அறை எங்கும் பதிக்கவே 
எனக் கூறி முகம் சுழிச்சு நின்றாள்

வறட்சியின் வீரியத்தால் 
குழாய் நீர் கொதி 
நீராய்ப் போனது 
குளிந்த நீரில் நான் 
விழுந்து குளிக்க 

மேலோகம் சென்று 
உறைந்த படியே உறங்கும் 
பனியைத்  தட்டி எழுப்பிக் கொண்டு 
வந்து குளியலறைத் தொட்டியை 
நிறைத்து விடு 
குளிந்த நீரிலே நான் 
இறங்கிக் குளிக்க வேண்டுமென்று 
மூக்கைச் சிந்தி நின்றாள் 

வட்ட நிலவைக் கூட்டி வா 
அதன் கிட்ட நின்று 
என்னோடு ஒப்பிட்டுப் பார்த்து 
ஒப்பனை செய்யப் போகின்றேன் 
என்று ஒப்பாரி வைத்து நின்றாள்

சுட்டெரிக்கும் சூரியனை 
அழைத்து வா 
அதிலே தீ எடுத்துத்  தீபம் 
எற்றப் போகின்றேன் 
என்று சுட்டு விரலைக் காட்டி 
கட்டளையிட்டபடியே நின்றாள்

இத்தனையும் 
நான் செய்ய வில்லை
இறுதியாய் ஓர் ஆசை 
அதை நிறைவேற்று 
என்று உரைத்தாள்
நான்  தலையசைத்து நின்றேன் 

போட்டாளே ஒரு போடு 
ஆடியது என் நாடி 
அருந்தி மரணிக்கப் போகிறேன் 
எடுத்துவா அந்த அமிர்தம் கடையும் 
வாசுகிப் பாம்பின் நாவில் 
உள்ள விசத்தை(ஷ)  என்றாள் 

கேட்டவை அத்தனையும் 
நான் கொடுக்க வில்லை 
இருந்தும் 
மரணத்தைத்  தழுவி விட்டாள் 

சுடு காடு வரை சென்றும் 
தள்ளியே நின்று கொண்டேன் 
கொள்ளியும் வைக்காமல் 
இங்கும் எதை 
எதைச்  செய்ய வேண்டும் 
என்று யார் யார் காதிலே 
சொல்லி  வைத்துச்  சென்றாளோ ?
என்னும் பயத்தினாலே 

கலா

Post a Comment

0 Comments