
மழை பெய்யத் துவங்கியதும்
மழையாடை அணிந்து கொள்கின்றன
சாலையோரக் கடைகள்
When it started raining
They wear raincoats
The roadside shops
வீட்டில் சண்டை
கிழிந்து கிடக்கும் தலையணைகள்
விடுமுறையில் பிள்ளைகள்
Fight at home
Torn pillows are revealing
Children on vacation
இலையுதிர்த்த மரம்
இதமாய் உரசிச் செல்கிறது
அந்த பட்டாம்பூச்சி
Deciduous tree
Caressed it soothingly
That butterfly
காலியான வகுப்பறை
நாளைய பாடத்துடன் தயாராக
கரும்பலகை
An empty classroom
Be ready with tomorrow's lesson
Blackboard
நெடிய இருள்
தூர நட்சத்திரத்தைத் தொட
நீண்ட கைகளில் வெளிச்சம்
Long darkness
Light in the stretched arms
To touch the distant star
சாலையில் கடக்கிறேன்
தலையில் பறவையிட்ட எச்சத்தில்
நிறைய விதைகள்.
I am crossing the road
In the bird droppings on the head
Lots of seeds
கழிவறையைக் காணவில்லை
தேடியலைந்து நேரம் போக்கவில்லை
தலையில் எச்சமிடுகிறது பறவை
Not able to find the toilet
Without wasting much time
Remnating bird on the head
வசந்தத்தின் ஆரம்பம்
குளத்தில் நிறைந்திருக்கிறது
பறவைகளின் காலடி தடங்கள்
the beginning of spring
the pool is full of
the footprints of birds
ஒத்தையடிப் பாதை
முந்தையவருக்கு வலி
பின் வருவது வழி
a footpath
pain for a former
a way for the follower
ஊர்க் கிணறு
சுத்தம் செய்ய மட்டும்
துப்புரவுத் தொழிலாளி
village well
Just to clean up only
Sanitation worker
லிமரைக்கூ
சுரைக்கொடி இலையில் ஓவியம்
மெல்ல மெல்ல வரைந்தே நகரும்
சிறிய புழுவின் காவியம்
Painting on the bottle gourd leaves
Draws slowly and moving
The epic of the little helminths
வாசமாகப் பூத்தூவலுடன் இருக்கை
மரத்தினடியில் எதிர்பார்த்தபடி
அழகாய்க் கூறும்
வண்ண மலர்களின் மிடுக்கை
Park bench with fragrant flowers
Express beautifully as expected under the tree
The dexterity of the colored flowers

இளையபாரதி, கந்தகப்பூக்கள்
Translated by : Raju Arockiasamy, Tamilnadu, India.

.gif)




1 Comments
மிகவும் சிறப்பாக வெளியிட்ட ஆசிரியருக்கும் குழுவினருக்கும் என் ஆகச்சிறந்த வணக்கங்கள்!
ReplyDelete