டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள்

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள்


டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இந்தியா – இங்கிலாந்து, நியூஸிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ண செம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி அதன்பின் பட்டம் வெல்லவில்லை. இந்நிலையில் நிகழாண்டு உலகக் கிண்ணத்தில் குரூப் 2 பிரிவில் சிம்பாப்வேயை 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

பங்களாதேஷ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் இரண்டாவது அணியாக அரையிறுதியில் நுழைந்தது.

அரையிறுதி ஆட்டங்கள்:
குரூப் 1 பிரிவில் நியூஸிலாந்து முதலிடமும், இங்கிலாந்து இரண்டாம் இடமும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

வரும் 10 ஆம் திகதி அடிலெய்டில் இங்கிலாந்துடன் அரையிறுதியில் மோதுகிறது இந்தியா. சிட்னியில் 9 ஆம் திகதி நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூஸிலாந்துடன் மோதுகிறது பாகிஸ்தான்.

சிம்பாப்வே ஆட்டத்துக்கு முன்னரே இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதி ஆகி இருந்தது. அதே நேரம் நெதா்லாந்திடம் 13 ஓட்டங்களில் தென்னாப்பிரிக்க அணி தோற்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியது.
குரூப் 1 பிரிவில் 7 புள்ளிகளுடன் கடைசி ஆட்டத்தில் அயா்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது நியூஸிலாந்து.

இங்கிலாந்து, ஆஸி. தலா 7 புள்ளிகளுடன் இருந்த நிலையில், இங்கிலாந்து கடைசி ஆட்டத்தில் வென்று அதிக ரன் ரேட்டுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

பட்டம் வெல்லும் அணிகளாக கருதப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸி., தென்னாப்பிரிக்கா, மே.இந்திய தீவுகள், ஆகியவை வெளியேறின.


 


Post a Comment

Previous Post Next Post