நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென ஏரியில் விழுந்து மூழ்கியது.

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென ஏரியில் விழுந்து மூழ்கியது.

தான்சானியா, டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில், விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அறிந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸார், விமானம் 100 மீட்டர் உயரத்தில் நடுவானில் சென்றபோது மோசமான வானிலை நிலவியது.

மேலும், மழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தண்ணீரில் மூழ்கியது. இதில் பயணிகள் 26 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். 

 

Post a Comment

Previous Post Next Post