ராஜகுமாரியின் சுயம்வரம்-2

ராஜகுமாரியின் சுயம்வரம்-2


உடனே மாப்பிளையின் உடல் அருகே அனைவரும் கூடி விட்டனர் அரண்மனை மருத்துவர் உடலை பரிசோதனை செய்து கொண்டு இருக்க மாப்பிளை  வீட்டாருக்கு  செய்தி கொடுக்கப் பட்டது அதிர்ச்சியோடு அவர்களும் வந்து விட்டனர் பெற்றோரும் உடன் பிறப்புக்களும் கதறுகின்றனர் இன் நாட்டு மருத்துவரை நம்பாத மாப்பிளை வீட்டார் தங்கள் மருத்துவரை அழைத்து பரியோதனை செய்தார்கள் இறப்பின் காரணம் அறிந்திட. இருவருமே கொடுத்தவை ஒருரே பதில் தான் 

இதயம் பலவீனம் அடைந்து மூச்சு தினறலே இறப்புக்கு காரணம் . இனி என்ன செய்வது நேற்று திருமண வீடு இன்று இழவு வீடு அரண்மனைக்கு வந்த சாவக்கேடு  .அரசன் குணாலன் நொறுங்கிப் போனான் மண வாழ்வில் நாட்டம் இல்லாத மகளை .கட்டாயப் படுத்தி இந்த நிலையை இறைவன் கொடுத்து விட்டானே எனன .
துக்கம் மெது மெதுவாக விலகி சுமாரா இயல்பு நிலைக்கு அனைவரும் வந்து விட்டனர் நாளும் பொழுதும் வேகமாய்ப் பயணித்து   ஓர் ஆண்டு நிறைவும் பெற்றதும் .அதே நாட்டு மன்னரிடம் இருந்து எதிர்பாராத வண்ணம் அழைப்பு வந்தது.தாங்கள் இங்கு சற்று வாருங்கள் மன்னா என  குணாலன் அரசனுக்கு   தயக்கத்தோடும் சிந்தனையோடும் குணாலன் அரசன் சென்றான்.

வரவேற்பு எப்போதும் போன்று மரியாதையோடு தான் நடந்தது .இருந்தும் உள்ளூரம் ஏதோ ஒன்றை 
ஓட விட்ட வாறே அமர்ந்தார் குணாலன் மன்னன். 

என்ன ஒரு ஆச்சரியம் எதிர்பாராத நற்செய்தி கூறினார் அன் நாட்டு மன்னர். 

தங்களின் இளைய புதல்வனுக்கு தங்கள் மகளையே திருமணம் செய்திட தாங்கள் அனைவருக்கும் விருப்பம் உள்ளதாகவும் .அரசியிடமும் மருமகளிடமும் சம்மதம் வாங்கித் தரும் படியும் .சம்மந்தியான அன் நாட்டு அரசன் கூறினான் .குணாலன் மன்னனின் கண்களில்  ஆனந்த நீர் பொங்கி எழுந்தது. அதோடு தானும் எழுந்து கொண்டான் .அரசனை ஆரத் தழுவி  மகிழ்ச்சியைப் பகிர்ந்து .

நன்றி உரைத்து விடை பெற்றான்.  மகளின் மறு மணம் பற்றிய கற்பனையோடு.  தன் நாடு விரைந்தான்.
சம்மந்தி வீட்டுக்குப் போன மன்னனின் வருகை கண்டு மகராணியார் பாதி வழி வரை வந்து வரவேற்றார்.
அப்போது மகாராணி மன்னர் முகத்தைக் கவனிக்கத் தவறவில்லை.

தனது கணவரின் முகத்தில் புன்னகைப் பூ மலர்ந்திடக் கண்டு .உள்ளூரம் நிம்மதி அடைந்தார் .ஒரு அசம்பவமும் நடக்கவில்லை என்று  பெரும்மூச்சு விட்டார்.

 பல்லக்கை விட்டு இறங்கிய ராஜா மனைவியைக் கட்டி அணைத்து சந்தோசத்தை வெளிக்காட்டினார்.  
தான் சென்று அறிந்த அந்த நல்ல விடையத்தை குதூகலிப்புடன் கூறி முடித்தார்.

(என்று பாட்டி கூறியதும் கதை கேட்டுக் கொண்டு கடலை கொறித்த மேரி அக்கா கேட்டார் அப்போ மறுமணம்  செய்து விடுவார்களா பாட்டி  அந்தக் காலத்தில் உடன் கட்டையேறுவது என்று தானே எங்க தாத்தா சொல்லிக் கொள்வார் நான் அப்போதே கேட்க நினைத்தேன்  ஏதோ பேச்சில் இருந்ததால் மறந்துட்டேன் என்றார் மேரி அக்கா  பாட்டி மேரி அக்காவைப் பார்த்துக் கூறினார்  நீ சொல்வது உண்மை தான் அது  கட்டாயப் படுத்தும் தண்டனை இல்லை சில மனைவி மாரே தாமாக முன் வந்து கணவன் பிரிவை தாங்காது உடன் கட்டை ஏறுவார்கள் ஒரு சில அரக்கர்கள் பயமுத்தி செய்திட சொல்வார்கள் ஆனால் இது கட்டாய நடை முறை இல்லை என பாட்டி விளக்கம் கொடுத்த வாறே கூறினார்  இது இரண்டோடு முடியாது மேரி  பொறுத்து இரு அப்புறமா கதையை மறந்திடுவேன் உன்னிப்பாகக் கேளு இருந்து  என்றாள் பாட்டிமா 
ம்ம்ம் போட்டார் மேரி அக்கா)
(தொடரும்)
கலா


 


Post a Comment

Previous Post Next Post