திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-63

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-63


குறள் 763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்.

மாப்ள... எலிகள்லாம் ஒண்ணு சேந்து எதுத்தாலும், பாம்பு மூச்சு விட்டா, அத்தனையும் அழிஞ்சு பொயிரும். அது மாதிரி தான், எம்புட்டு பெரிய பகை எதுத்து வந்தாலும், மன உறுதி உள்ள வீரன் கிட்ட ஒண்ணும் நடக்காது மாப்ள. 

குறள் 764
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த

வன்க ணதுவே படை.

தம்பி... போர்க்களத்துல எந்த விதமான சேதம் இல்லாமலும், எதிரிகளோட சூழ்ச்சியில மாட்டாமலும், வழி வழியா வரக்கூடிய அஞ்சாமையும் உடையது தான் உண்மையான படை. 

குறள் 765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை.

தம்பி.. எமனே எதுத்து வாரான்னு வச்சுக்க. அவனையும் எதுத்து சண்டை போட்டு வெல்லக் கூடிய ஆற்றல் உடையதுக்குப் பேரு தான் படை தம்பி. 

குறள் 766
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.

மாப்ள...ஒரு நல்ல படைக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ன என்னன்னு தெரியுமா?
✍️ மொதல்ல வீரம்
✍️ அடுத்தது மானம்
✍️ அதுக்கு அடுத்தாப்ல நல்ல வழியில் நடப்பது
✍️ கடைசியா தலைவனின் நம்பிக்கையை பெறுவது. 
இந்த நாலு பண்புகளும் தான் இருக்கணும் மாப்ள.. 

குறள் 767
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து.

மாப்ள.. எதிரிங்க போர் புரிய நெறைய திட்டம் தீட்டி வச்சுருப்பாங்க. அந்த திட்டங்களை நல்லா தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி எதிர் திட்டம் போட்டு,  அவங்களை வெற்றி கொள்வது தான் சிறந்த படை மாப்ள. 
(தொடரும்)


 


Post a Comment

Previous Post Next Post