சிகரெட் பிடித்துக்கொண்டே மாரத்தான்.. 3 மணி நேரத்தில் 42 கி.மீ ஓடி கவனம் ஈர்த்த சீன முதியவர்.. வைரல் !

சிகரெட் பிடித்துக்கொண்டே மாரத்தான்.. 3 மணி நேரத்தில் 42 கி.மீ ஓடி கவனம் ஈர்த்த சீன முதியவர்.. வைரல் !

சிகரெட் பிடித்துக்கொண்டே முதியவர் ஒருவர் மாரத்தான் ஓடியுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறும். இதில் பல்வேறு வீரர்கள் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களால் முடிந்த வரை ஓடுவர். இதனை போட்டியாக சிலர் பார்த்தும் ஓடுவர். பல கிலோமீட்டர் வரை ஓட கூடிய இந்த பந்தயத்தில் உடலை தினப்படுத்தவும் அதிகமானோர் பங்கேற்று ஓடுவர்.

அந்த வகையில் சீனாவில் அண்மையில் 'குவாங்சூ மாரத்தான்' என்ற போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு போட்டியாளர்கள் பங்கேற்று ஓடினர். இந்த போட்டியானது சுமார் 42 கி.மீட்டர் வரை ஓட வேண்டியது இருக்கும். இதில் 50 வயது மதிக்கத்தக்க சென் என்ற நபரும் இந்த போட்டியில் பங்கேற்றார்.

சுமார் 42 கிலோ மீட்டர் ஓட வேண்டியதுள்ள இந்த போட்டியில் பங்கேற்ற சென், தனது வாயில் சிகரெட் பிடித்துக்கொண்டே ஓடியுள்ளார். செயின் ஸ்மோக்கரான (Chain smoker) இவர் இந்த போட்டி முழுவதும் சிகரெட் பிடித்துக்கொண்டே ஓடி அனைவரது கணவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அதிலும் ஒரு சிகரெட் அல்ல ஒரு பாக்கெட் சிகரெட்டையும் ஒன்றுக்கு பின்னால் இன்னொன்று என முழுவதுமாக பற்ற வைத்து புகைபிடித்துக்கொண்டே ஓடியுள்ளார். அதுவும் 42 கிலோ மீட்டரை சுமார் 3 மணி நேரம் 28 நிமிடங்களில் கடந்து 574-வது இடத்தை பிடித்துள்ளார்.

1500 போட்டியாளர்களில் 574-வது இடத்தை பிடித்து சாதனையும் செய்துள்ளார். இது இவரது முதல் மாரத்தான் போட்டியல்ல. முன்னதாக 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற வேறொரு மாரத்தான் போட்டிகளிலும் இவர் பங்கேற்றபோது இதே போன்று சிகெரட் பிடித்து கொண்டே ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் புகைப்பிடித்து கொண்டே ஓடுவது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இவரது செயலுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தாலும், இவரது செயல் பலர் மத்தியிலும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. சிகரெட் பிடித்துக்கொண்ட மாரத்தான் பந்தயத்தில் தொடர்ந்து ஓடிய முதியவரின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


 


Post a Comment

Previous Post Next Post