பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 ஆவது வயதில் காலமானார்

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 ஆவது வயதில் காலமானார்

செப்டெம்பர் 2021 முதல் பெருங்குடல் புற்றுநோயுடன் போராடி வந்த அவருக்கு இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீலே புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி இறந்துவிட்டதாக அவரது முகவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

கால்பந்து உலகின் ஜாம்பவன் பீலேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக கடந்த நாட்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில்,பீலேவிற்கு இறுதி கட்ட சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த செப்டெம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை பலவீனமடைந்து வந்துள்ளது.

இதனால் சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போது கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவந்துள்ளது.

இதனை தொடர்ந்து 'பலியேட்டிவ் கேர்' எனப்படும் இறுதிகட்ட சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே உயிரிழந்துள்ளார். 

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, மூன்று முறை உலகக்கிண்ணம் (1958, 1962, 1970) வென்ற வீரர் ஆவார்.

பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.


 


Post a Comment

Previous Post Next Post