30 ஆண்டுகளுக்கு முன்புள்ள கரு முட்டைகள் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதியர்

30 ஆண்டுகளுக்கு முன்புள்ள கரு முட்டைகள் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட தம்பதியர்

30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கரு முட்டைகள் மூலம் தம்பதியர் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்தமை, பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் Oregan என்னும் பகுதியை சேர்ந்தவர் பிலிப் ரிட்ஜ்வே. இவரது மனைவி பெயர் ரேச்சல். இந்த தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில், தற்போது கடந்த 1992 ஆம் ஆண்டு உறைய வைக்கப்பட்ட கரு முட்டைகளை கொண்டு இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன்புள்ள கரு முட்டைகள் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது மருத்துவ உலகில் பெரிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு, 27 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருவில் இருந்து பிறந்த குழந்தையே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை இரட்டை குழந்தைகளுக்கு லிடியா மற்றும் டிமோத்தி என பெயர் சூட்டி உள்ள பிலிப் மற்றும் ரேச்சல் ஆகியோர், இவர்கள் தான் தங்களின் மூத்த குழந்தைகள் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசும் பிலிப், "லிடியா மற்றும் டிமோத்தி ஆகியோருக்கு கடவுள் உயிர் கொடுத்த போது எனக்கு 5 வயது. அன்றில் இருந்து அவர்கள் உயிர்களை பாதுகாத்து வந்துள்ளனர்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.




 


Post a Comment

Previous Post Next Post