ரஷ்யாவும்-உக்ரைனும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்....ஜெனரல் மார்க் மில்லி

ரஷ்யாவும்-உக்ரைனும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்....ஜெனரல் மார்க் மில்லி

உக்ரைன் போரில் 100,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது படுகாயமடைந்து இருக்கலாம் என அமெரிக்காவின் உயர்நிலை ஜெனரல் மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் எகனாமிக் கிளப்பில் நேற்று பேசிய நாட்டின் உயர்நிலை ஜெனரல் மார்க் மில்லி (Mark Milley), உக்ரைன் போரில் 100,000 ரஷ்ய வீரர்கள் வரை கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது படுகாயமடைந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதே அளவிலான இழப்பை உக்ரைனும் சந்தித்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவ வெற்றி என்பது ரஷ்யாவுக்கும் அல்லது உக்ரைனுக்கும் சாத்தியமற்றதாக இருக்கலாம், எனவே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான வாய்ப்பு இது என மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.

இராணுவ வெற்றி என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தங்கள் இராணுவ வழிமுறைகளால் அடைய முடியாமல் போகலாம், எனவே இருநாடுகளும் போரை நிறுத்துவதற்கு வேறு வழிகளுக்கு திரும்ப வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


Post a Comment

Previous Post Next Post