இலங்கை தொடர்பாக நேற்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதம்

இலங்கை தொடர்பாக நேற்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கையை வலியுறுத்தவேண்டும், அத்துடன் இராணுவ செலவினங்களை குறைக்குமாறு கோரவேண்டும் என்று அந்த நாட்டை வலியுறுத்தவேண்டும் என்று பிரித்தானிய   நாடாளுமன்றில் கோரப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக நேற்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின்போது, இந்த வலியுறுத்தல்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ளனர். 

விவாதத்தை ஆரம்பித்து வைத்த எலியட் கோல்பர்ன், கார்ஷால்டன், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு அப்பால் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச நடவடிக்கை மட்டும் போதாது. போர்க்குற்றங்களை உண்மையாக விசாரிக்கவும் குற்றவியல் பொறுப்புக்கூறலைத் தொடரவும் ஒரு பொறிமுறை அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையின் போர்க்குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை கொல்பேர்ன் மேலும் வலியுறுத்தினார்.

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்யவும், அவர்களைத் தண்டிக்கவும் குறிப்பிட்ட ஆதாரங்கள் திரட்டப்படவேண்டும் என்று அவர் கோரினார்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அந்த நாட்டின் இராணுவக்கட்டமைப்பே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டொனல் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஏனைய நாடுகள் விரும்பும் வகையில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன.

எனினும் அரசியல் மற்றும் இராணுவ கட்டமைப்பு தமது சொந்த நலன்களுக்காக பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

கொன்சர்வேட்டிவ் உறுப்பினர் தெரேசா வில்லியர்ஸும் இந்தக் கருத்தில், இலங்கை அரசாங்கம்,பொருளாதார நடவடிக்கைகளில் தமிழர்களை உள்வாங்கத் தவறியுள்ளதாக தெரிவி;த்தார்.

பாரிய அளவிலான இராணுவ ஊழலை ஆதரிக்கும்,வரவு செலவுத் திட்டமே இலங்கையின் பொருளாதாரத்தை திவால் விளிம்பிற்கு இட்டுச் சென்றுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கையை மீட்கப்பட வேண்டுமானால், வருடாந்தம் 1.86 பில்லியன் டொலர்களாக இருக்கும் இராணுவச் செலவினங்களைக் குறைக்க வேண்டும்.

இது அந்த நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி வரவுசெலவுத் திட்டங்களை விட அதிகமான நிதியொதுக்கமாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கோல்பர்ன் தெரிவித்தார்.



 


Post a Comment

Previous Post Next Post