கபூரியா அரபுக்கலாசாலை அபகரிப்பின் அடுத்த கட்ட நகர்வு அதிபர் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு

கபூரியா அரபுக்கலாசாலை அபகரிப்பின் அடுத்த கட்ட நகர்வு அதிபர் உள்ளே செல்ல அனுமதி மறுப்பு



காலஞ்சென்ற பெருந்தகை N D H  அப்துல் கபூர் அவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்ட சொத்துக்களில் விலை மதிக்க முடியாத ஒரு சொத்தாக மகரகமையில் அமையப்பெற்றுள்ள கபூரியா அரபு மதரஸாவும்  ஒன்றாகும்.

இவ்விடமானது சுமார் 35 ஏக்கர்களைக் கொண்ட விசாலமான இடமாகும். இதில் 17.5 ஏக்கர் கபூரியா அரபு மதரஸாவிற்கும் 17.5  ஏக்கர் கபூரியா கொழும்பு ஸாஹிரா வித்தியாலயத்திற்கும் அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்கள் எழுதி வைத்துள்ளார்கள்.

மேலும் கபூரியா மதரஸாவின் பராமரிப்புச் செலவுக்காக, அல்ஹாஜ் அப்துல் கபூர்  அவர்களின் இன்னுமொரு விலை மதிக்க முடியாத சொத்தாக  கொழும்பு கிரேன்பாஸில் உள்ள பல நூறு கோடிகள் பெருமதியான சுலைமான வைத்தியசாலையை எழுதி வைத்தார்கள்.

அண்மைக்காலத்தில் பெருந்தகை அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்களின் குடும்பத்தில் நன்காகாவது பரம்பரையாக பிறந்த ஒருவரும் அவரது மனைவியும்  இவை அந்தனையும் தங்களுக்குச் சேரவேண்டிய செத்துக்கள் என வாதாடி, அல்ஹாஜ் கபூர் அவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கா வழங்கப்பட்ட சொத்துக்களை அபகரித்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் நிவாக கட்டமைப்பிற்கு அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் அன்று முதல் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இதன் அடிப்படைபில் இக்குறிப்பிட்ட நபரும் நிர்வாகத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

பாயும் புலியாக நிர்வாகத்தில் பதுங்கி இருந்த இவர், அதனுல் இருக்கும் நெளிவு சுளிவுகள் அத்தனையும் அறிந்து கொண்டதன் பின் அத்தனை சொத்துக்களையும் கையகப்படுத்தும் வேட்டையில் இறங்கியுளாளார்.

சமூகத்திற்காக சொத்துதுக்க்களை வாரி வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்களின் குடும்ப நிர்வாக உறுப்பினர்களுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியவர், தனது மனைவியையும் நிறைவேற்று அதிகாரக் குழுவின் உறுப்பினராக உள்நுழைத்துக் கொண்டார்.

கபூரியா அரபுக் கலாசாலையின் நிர்வாக உறுப்பினர்களில் ஒரு பெண் பங்குகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதனடிப்படையில் கபூரியாவுக்குச் சொந்தமான சொத்தான முன்னைய சுலைமான் தனியார் வைத்திய சாலையின் இடத்தை 145 கோடிகளுக்கு இவர் தனியார் கம்பனி ஒன்றிற்கு குத்தகைக்கும் வழங்கியுள்ளார்.

தற்போது கபூரியா மதரஸாவின் அப்துல் கபூர் அவர்களின் குடும்பத்தில் உள்ள முக்கிய மூத்த நிர்வாகிகளை நீக்கியுள்ளதோடு,தனக்குத் தேவையானவர்களையும் பதவியில் அமர்த்தியுள்ளார்.

அத்துடன் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி
அதன் நிர்வாகிகள் உள் நுழைவதற்கான தடை உத்தரவையும் நீதிமன்றம் மூலமாக பெற்றுள்ளார்.

மேலும் இதற்கான காவலர்களாக சில மாற்று மதத்தவர்களையும் நியமித்துள்ளார். அங்கு தொழுகைக்கு செல்பவர்களுக்கு காவலர்கள் விசாரணைகளை நடத்தி இடையூறுகளையும் விழைவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இதற்கான வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அரபுக் கலாசாலையின் அதிபர் உள் நுழைவது தடுக்கப்படுள்ளது. கடும் முயற்சிகளுக்கு மத்தியில்
அதிபரை உள்நுழைய அனுமதி வழங்கிய போதும்,
அதிபருக்கு எவ்விதமான நிர்வாக அதிகாரங்களும் வழங்கப்படாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார்.

இது சம்பந்தமாக அரபுக் கலாசாலையில் முக்கிய நிர்வாகிகளுடன் தகவல்களை பெற்றுக் கொண்டபோது, இங்கு கற்பிக்கப்படும் சில அரபு பாடப் புத்தகங்களை சுட்டிக் காட்டி அவை பயங்கரவாதத்தை போதிப்பதாக இவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில சுட்டிக் காட்டியதாகவும் கவலையுடன் தெரிவித்தனர்.

(பேருவளை ஹில்மி )


 


Post a Comment

Previous Post Next Post