முஸ்லிம் சட்டத்தில் திருத்தம் எவ்வாறு அமையலாம்? புத்தளத்தில் நிபுணத்துவ கலந்துரையாடல்!

முஸ்லிம் சட்டத்தில் திருத்தம் எவ்வாறு அமையலாம்? புத்தளத்தில் நிபுணத்துவ கலந்துரையாடல்!


முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலான திறந்த கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் (26) காலை 9.00மணி முதல் பி.ப.2.30வரை, புத்தளம் இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள “சேன்ஞ்” தொண்டு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வை புத்தளம் சேன்ஞ் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

சேன்ஜ் நிறுவன பணிப்பாளர் சட்டத்தரணி தாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், உலமாக்கள், புத்தி ஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக துறை சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

திருமண வயது, பெண்ணின் கையொப்பம், பலதார மணம், பெண் காதி, காதியின் தகைமை, காதி நீதிமன்றம் போன்ற உப தலைப்புகளில், கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.இது தொடர்பில் எதிரும் புதிருமான கருத்துக்களைக் கொண்டவர்கள் பலர் இதில் கலந்துகொண்டு அழகிய முறையில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை இந் நிகழ்வின் விசேட அம்சமாகும்.
நிகழ்வின் இறுதியில், தெரிவுசெய்யப்பட்ட தலைப்புக்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான உடன்பாடுகள் எட்டப்பட்டு அது தொடர்பான வரைபுகளை குறித்த நிறுவனங்களுக்கு முன்வைக்க ஏற்பாடு செய்வதாக முடிவாகியதைத் தொடர்ந்து நன்றியுரை யுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
newsnow


 


Post a Comment

Previous Post Next Post