Ticker

6/recent/ticker-posts

மௌனம் பேசும்!


பேசாமல் இதழ்களை 
பூட்டி வைத்துவிடு
மௌனம் மட்டும் பேசட்டும்
மௌன மொழியை விரும்பி
மூலமொழி மறந்தேன்
மௌனமும் மௌனமும் சந்திக்கின்ற
ஆழிய வெளியொன்றிலே
யுத்தங்கள் அரங்கேற
அங்கே மனக்குமுறுலெனும்
குற்றங்கள்
பெருங்குரலெடுத்துக்கத்தி
கத்திச் சண்டை போடும்
ஆயினும் மண்ணுள்
துளையிட்டு
மறைந்து கொள்ளும்
தீக்கோழி போல
உன் மௌனம்!

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை



 


Post a Comment

0 Comments