Ticker

6/recent/ticker-posts

கனவு மெய்ப்பட வேண்டும்!


கனவு மெய்ப்பட வேண்டும்
காற்றுடன் பேசிட வேண்டும்
கற்றுத் தேர்ந்திட வேண்டும்
காலத்தை வென்றிட வேண்டும்

மெட்டுக்கள் போட வேண்டும்
மொட்டுப்போல மலரவேண்டும்
மனங்களில் கருணை வேண்டும்
மலர்களாகிச் சிரிக்க வேண்டும்

கட்டுக்கடங்காமல் ஆசை வேண்டும்
விட்டுவிடாமல் அதை அடைய வேண்டும்
கண்களில் கணிசமாய்த் தீரம் வேண்டும்
காண்பவர் மதித்திடக் கண்ணியம் வேண்டும்

காலை வேளை விழிக்க வேண்டும்
கல்விச் செல்வம் பெற்றிட வேண்டும்
கடமை செய்திடும் கைகள் வேண்டும்
கண்ணீர் பொழியாக் கண்கள் வேண்டும்

இதயத்தில் ஈரம் துளிர்க்க வேண்டும்
இதமான தென்றலைச் சுகிக்க வேண்டும்
இமயம் போல வளர வேண்டும்
இன்பமே எங்கும் பொழிய வேண்டும்


Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை



 


Post a Comment

0 Comments