ராஜகுமாரியின் சுயம்வரம்-1

ராஜகுமாரியின் சுயம்வரம்-1

பொன்னுத் தாயி பாட்டி கதை சொன்னால்.
 கண் முன்னே காட்சியாய் வந்து விடும். அத்தனை கதாபாத்திரமும்.
ஒரு திரை அரங்கில் முழுமையாகப் படம் பார்த்த திருத்தியோடு. 
எழுந்து உறங்கிடப் போய் விடலாம். பொன்னுத் தாயி பாட்டி மகன் வீட்டில் இருந்து .

மகள் வீட்டுக்கு வந்தால் .தன் மகளோட பேரன் பேத்தி மட்டும் இல்லை .சுற்றி உள்ள மழலைகளுக்கும் மகிழ்ச்சியே  பாட்டி கூறும் .
உபகதை புராணக் கதை பழம் கதை. என்று அத்தனையும் இனிமை  
வெறுப்பு இன்றி தூக்கம் விழித்துக் கேட்டு ரசிக்கலாம் . 

சிறியோர் முதல் பெரியோர் வரை தன் கதை கூறும் சுவையின் 
தன்மையால் கட்டிப் போட்டு வைத்திருந்தார் எல்லோரையும் பொன்னுத் தாயி பாட்டி .

இன்று பாட்டி கூறப் போகும் கதை பாட்டி ஆரம்பித்தார் கதையைக் கூற வெத்தலையை மடித்த வாறே.

ஒரு ஊரில் ஒரு ராஜ குமாரன் வாழ்ந்து வந்தான் . அவருக்குப் பெயரோ  குணாலன். பெயருக்கு ஏற்றால் போல். நாட்டு மக்களை ஆதரித்தும் 
துன்பம் துயர் அண்டாமல் பாதுகாத்தும் மகிழ்வான .வாழ்வுக்கு வழி காட்டியும் ஆட்சி புரிந்து வந்தான் .பொதுவாக அரசன் என்றால் மக்கள் மதிப்பதும் அன்பு காட்டுவதும் வழமைதான் .

ஆனால்  குணாலன் மகராஜாவை  அளவு கடந்த மதிப்போடும் அன்போடும் மக்கள் அனுகி வந்தார்கள்.
   
அரசரின் துணைவியாரோ அடுத்த நாட்டு இலவரசி சிவகாம்பிகை  .அழகு அறிவு நிறைந்த மன்னனுக்கு   ஏற்றால் போல் துணைவியாக  அமைந்தாள் .மக்களுக்கு எல்லை இல்லா மகிழ்வு.   மகராணியிடம் சற்று கண்டிப்பும் தான் ராணி என்னும் கர்வமும்  கிறிடத்தோடு தலையில் இருக்கத் தான் செய்தது .

ஆனாலும் அதை மக்களிடம் காட்ட முடியவில்லை. மகராஜனின் கட்டளைக்குக் கட்டுப் பட்டதால் . திருமணம் நடந்து இரண்டு ஆண்டுக்குப் பின்னர்  அரசர் தந்தையானார் .அழகான குட்டி மகராணி மாளிகை ஆளப் பிறந்தாள். எல்லை இல்லாத  இன்பத்தில் ராணியும் ராஜாவும் மிதந்தார்கள். மக்களை அழைத்து பணமும் உடையும் உணவுமாக அள்ளிக் கொடுத்து சந்தோஷத்தை பகிர்ந்தார் குணாலன் மகராஜா. (பின்நாளில் நாடு என்னாகும் என்பதை அறியாமலே இன்ப வெள்ளத்தில் நாட்டு மக்களும் மிதந்தார்கள்  )  நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணமாக குட்டி மகாராணி  வளர்ந்து குமரியானாள்  ஆண் மகன் இல்லை என்னும் குறை தெரியாமலே மகராஜா தன் மகளை ஆணுக்கு நிகராக அத்தனை பயிற்சியும் கொடுத்து வளர்த்தார் அழகோடு அறிவு அதனோடு வீரமும் இணைந்த அதிமாகா புத்திசாலியாகவே இளவரசி மேகலை என்னும் பெயரோடு வலம் வந்தாள் .  தன் தந்தையைப் போன்று நாட்டு மக்களை வேற்றுமை இன்றி நேசிப்பதோடு .கூடிப் பேசி விளையாடி  அரண்மனைக் கிளி என்னும் அகங்கரம் திறந்து வாழ்ந்தாள் . மகாராணிக்கு இவை சற்று வெறுப்பைக் கொடுத்தாலும் மகளைக் கடிந்து கொள்ள மாட்டாள் .

செல்ல மகள் கண்ணில் வெள்ளம் பெருகிட தான் காரணமாக. அமைந்திடன் கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள் .இளவரசரின் மகள் மேகலையின் புகழ் பல நாட்டு மன்னர் காதுக்கு எட்டியது .புகழ்ந்தும் பாடியும் நாட்டுக்கு நாடு சென்று பொன் பொருள் பெற்றிடும் புலவர்களின் மூலம் . இதை அறிந்ததும் தெக்குத் திசை மன்னன் தெம்மாங்கு பாட்டின் கண்ணன். பூங்குழலி பெற்ற பிள்ளை மாறனுக்கு மணம் முடித்திட ஆசைப் பட்டு ஓலை அனுப்பப் பட்டது .பார்வையிட்ட குணாலன் மன்னரோ சபையைக் கூட்டி ஆலோசனை செய்தார் .

முடிவை மகளிடமே ஒப்படைத்தார். ராஜகுமாரிக்கோ திருமணத்தில் நாட்டம் இல்லை .நாட்டின் மேல் தான் அக்கறை சற்று தயங்கிக் கொண்டே தந்தையிடம் கூறினாள் .தந்தை அதிர்ச்சி அடைந்தார்  மகளை அருகே அழைத்து பெண்ணுக்குக் கண்ணே கணவன் தான் மா .

இப்போது தள்ளிப் போட்டாலும் பின்நாளில் நிச்சயமாக. சுயம்வரம் நடத்திட நீ ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் .என்று கட்டளை இட்டு நகர்ந்தார்  .வந்த ஓலைக்கு பதில்  அனுப்பும் படி மந்திரியிடம் கேட்டுக் கொண்டார் .ஓலையில் தன் செல்வப் புதல்விக்கு தற்போது சுயம்வரம் வேண்டாம். என்று மறுத்து விட்டாள். தாங்கள் மன்னிக்க வேண்டும் .

என்னும் குறிப்பை பதிக்கச் சொன்னார். மந்திரியும் அவ்வாறே செய்தார்.  .அதன் பின் வந்த. பெண் கேட்கும் சுவடுக்கெல்லாம்.  மந்திரியே பதில் கொடுத்து வந்தார் .

ஏதோ ஒரு காரணத்தைக் கூறித்  தட்டிக் கழிச்சார் . இப்படியே நாட்கள் கடக்கும் போதுதான் பூங்குழலி பொங்கி எழுந்தாள். தன் மகனை மணமகனாக ஏற்க மறுத்த ராஜகுமாரியை பலி வாங்கிடத் துடித்தாள் .
அவளோ அரக்கர் வம்சாவளி  கொடுமைக்  காரியல்லவா .
அவர்கள்  குணாலனின் நாட்டில் படையெடுக்க சந்தப்பம் தேடிக் 
கொண்டு இருந்தாள். அப்போதுதான் அவளுக்கும் அரசன் குணாலனுக்கும் இடையில் .ஓர் சந்திப்பு நிகழ்ந்தது. மாபெரும்  ஆலயம் ஒன்றில்  மரியாதை நிமித்தமாக குணாலன் மன்னனுக்கு அழைப்புக் கொடுத்திருந்தார்கள் .

ஆலய பூசகர்கள் அதை மதித்து வந்தார் மன்னன் குணாலன் .அழையா விருந்தாளியாய் வழியில் பயணித்துக் கொண்டு இருந்த பூங்குழலி மகாராணியும் அங்கு வந்தாள் .

இரு அரசர்களைக் கண்டதும் பூசாரி விழித்தார். யாருக்கு மரியாதை செய்வது என்று அறியாமல் தவிர்த்தார்.

நிலமையை அறிந்த குணாலன் மகாராஜா  மகாராணிக்கு மரியாதை செய்யும் படி கூறினார்.

 அப்போது அங்கே அமர்ந்து இருந்த குணாலன் மன்னரின் விசுவாசிகள். அதை தடுத்துக் குரல் கொடுத்தனர். ராஜாவுக்கே முதல் மரியாதை வேண்டும். அவர் அழைக்கப் பட்ட விருந்தாளி .

இரண்டாவது மரியாதையை ராணிக்குச் செய்யுங்கள் .என்று கோசம் போட்டனர். போர் தொடுக்க நல்ல நேரம் பார்த்த பூங்குழலிக்கு .
இது சாதகமாய்ப் போனது. தன்னை அவமதித்த. பூசாரியைக் கட்டி இழுத்து 

வர கட்டளையிட்டார் காவலாளியிடம். அதை நடக்க விடாமல் குணாலன் மகாராஜா தடுக்கவே  .சூழூரைத்தாள்  குழலி உன்னையும் உன் நாட்டையும் அழிக்காமல் விடமாட்டேன் .

என்று   சில வாரங்களிலே போர் கொடியோடு போர் வீரர்கள் குணாலன் எல்லைக்குள் நுழைந்தார்கள் .

 பின் வாங்காத குணால மன்னனும் தன் படையோடு போர் புரிந்தான்.
அதில் வெற்றியும் கண்டான். வீரத்தால் வெல்ல முடியாத பூங்குழலி ராணி சூட்சியால் மன்னனை வீழ்த்தும் முயற்சியில் இறங்கினாள் .

ஒரு மந்திர வாதியை நாடினாள் .

அவருக்கு பொன்னும் பொருளும் கொடுத்து .ராஜாவின் வம்சம் வளராத வாறு ஏதேனும் ஒன்றை செய்யுமாறு கட்டளையிட்டாள் .பணத்துக்கும் பொருளுக்கும் விலை போன மந்திரவாதி. தன் வித்தையால் ராஜாவின் அன்பு மகளின் உடலுக்குள் இரு தீய சக்திகளை ஏவி விட்டான்.

 இதை அறியாத மன்னன் குணாலன் தன் மகளுக்கு மணம் முடிக்க மணமக்களை தேடி பல நாட்டுக்கும் அறிவிப்புக் கொடுத்தான்.

 சுயம்வரம்  செய்யும் முன் சில பல வீர விளையாட்டுக்கள் வைத்து மாப்பிளையைத் தேர்வு செய்திடவே ஏற்பாடும் செய்து முடித்தான். சதியால் வீழ்த்த முன் வந்த சகுனி முனி அந்த நாளையே காத்திருந்தான். திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருந்தாலும் தந்தை தாய்க்கு அடி பணிந்த இளவரசியும் அலங்காரத்தோடு வந்தமர்ந்தாள்.

 வீர சாகாச விளையாட்டுக்கள் அறிவிப்பாகிக் கொண்டு இருந்தது.
 பல நாட்டு மன்னர்கள் தங்கள் புதல்வர்களோடு வந்தடைந்தனர். அவர்களோடு மந்திரவாதியும் வந்து விட்டான்.  பெரும் வரம் பெற்ற சாமியாராகக் காட்சி கொடுத்தான் .மந்திரவாதியைக் கண்ட அரசன் வணங்கி வரவேற்றான்  .

ஆசீ கூறி விட்டு மந்திரவாதி அரசனிடம் கூறினான் .ஐயனே நான் மலை அடிவாரம் தேடிப் புறப்பட்டேன் வரும் வழியில் அறிந்தேன் தங்கள் மகளின் சுயம்வரம் பற்றி .ஆசீர்வாதம் செய்து விட்டு முக்கிய விடையம் ஒன்றை உமது காதில் சொல்லி உன்னிட சத்திய வாக்குறுதி பெற்றுச் செல்லவே நாம் இங்கு நுழைந்தோம். அழைத்து வாரும் உமது மகளை என்றான்.  அப்பாவி அரசனும் முனியின் சாபம் நமக்கு வேண்டாம் என்று நினைத்து தன் மகளையும் அழைத்து விட்டார் .தந்திரமான மந்திரவாதி ஆசீர்வாதம் செய்வதாய் பாவனை செய்து அவன் கற்றுக் கொண்ட கெட்ட சக்தியை இளவரசியின் உடலில் இணைத்து விட்டான் .பின்பு அரசனை அழைத்து ரகசியம் உரைத்து சத்தியம் பெற்றுக் கொண்டு புறப்பட்டான். அவன் கூறிய ரகசியம் இவைதான் உமது மகளுக்கு திருமணம் நடக்கும் அன்று முதல் மூன்று நாள் காளி பூசை செய்து விட்டே அவர்கள் இல் வாழ்வைத் தொடர வேண்டும் .

அது வரை ஒரே அறையில் தான் தூங்கவும் வேண்டும் இணையாத இரவாக விடியவும் வேண்டும்.

 என்றான். அரசரும் ஏதோ சாமி குற்றம் தீரவே மந்திரவாதி இப்படிக் கூறுவதாக நினைத்து வாக்குறுதி கொடுத்து விட்டார்.  அவன் அந்த சத்தியத்தை வாங்கிடக் காரணமே புது மண தம்பதியினர் இணைவதைத் தடுத்திடவே அவர்கள் இணைந்தால் ராசாவின் வம்சம்  விருத்தியாகிடும் 

என அவன் அறிவான்.  நிகழப் போகும் விபரிதம் தெரியாமலே ஊரே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது  அரசர்களுக்கான போட்டி ஆரம்பமானது ராஜகுமாரியை கரம் பற்றும் ஆவலோடு  மன்னர்கள் அனைவரும் தங்கள் திறமையைக் காட்டினார்கள்  இறுதி வரை அத்தனை போட்டியிலும் வென்றான் வடக்கப் பட்டி  வதனமகராஜாவின் இரண்டாவது புதல்வன் வலங்காபுரி ராஜகுமாரன்.  ஏனைய அரசர்கள் அனைவரும் வலங்காபுரியை வாழ்த்தி விடை பெற்றனர் வெற்றி வாகை சூடிய ராஜ குமாரனை தன் குமாரத்தியின் துணைவனாக குணாலன் மன்னன் அறிவித்தார் .ராஜ குமாரியின் கரங்களில் பூ மாலையைக் கொடுத்து மாப்பிளை கழுத்தில் மாட்டி சம்மதத்தை வெளிக் காட்டுமாறு தாயாரும் தோழியர்களும் வலியுறுத்தி   ராஜ குமாரியின் கரத்தில் மாலையைக் கொடுத்தனர் .

வெட்கத்தோடு அன்ன நடை போட்டு மாப்பிள்ளை அருகே வந்தாள் ராஜகுமாரி  .

வண்ணத் தேரே அசைந்து வருவதாக உணர்ந்தான்  மாப்பிளை மகராஜா. மெதுவாய் தலை நிமிர்ந்து  மாலையை மாப்பிளை கழுத்தில் போட்டாள் மறு நிமிடமே நாணத்தால் தலை சாய்த்து நகர்ந்தாள். அப்போது மாப்பிளை  சில வார்த்தையை சபையிலே உரைத்தார் நான் இன் நாட்டு ராஜகுமாரியைப் பற்றி நன்று அறிவேன் என் குரு எப்போதும் இவர்களைப் பற்றி பேசுவார் வீர மங்கை என்று புகழ்ந்து நிற்பார் அப்போதே முடிவு எடுத்தேன் என் தாய்க்கும் வீரப் பெண்ணையே ரொம்ப பிடிக்கும் அவர்களுக்கு இப்படி ஒரு பெண்ணையே பரிசாய்க் கொண்டு நிறுத்த வேண்டும் என்று என் இலட்சியம் நிறைவேறியது 

அதற்கு வழிகாட்டியாக இருக்கும் தந்தைக்கும் பல வித்தைகளைக் கற்றுக் கொடுத்த  ஆசானுக்கும்  நன்றிகளை எடுத்துரைக்கின்றேன். இச் சபைதனிலே என்று கூறி அமர்ந்தான் .விருந்தும் முடிந்தது மண நாளும் முடிவானது சம்மந்தி மகராஜா மகிழ்வோடு விடை பெற்றார்.  தோழிகள் சூழ்ந்து கொண்டு ராஜகுமாரியைக் கேலியும் கிண்டலும் செய்து விளையாட ஆரம்பித்தார்கள்.  இனி என்ன ஒவ்வொரு பொழுதும் திருமணப் பேச்சு தான் அரண்மனையில் மட்டும் இல்லை நாட்டு மக்களின் நாவிலும் தான்.  மிக விமரிசையாக ராஜ குமாரியின் திருமணம் நடந்து முடிந்தது அன்று மாலை மந்திர வாதி கேட்டுக் கொண்டது போல் காளி பூசை ஆரம்பமானது நிறைவு பெற நடு சாமமம் ஆச்சு களைப்போடு இருந்த மண மக்கள் இருவரும் அயர்ந்து தூங்கி விட்டார்கள் அன்றைய சாந்தி முகூர்ந்தம் தடையானது. மறு நாள் காலை பணிப் பெண்கள் பாலோடும் பூவோடும் பன்னீரோடும் சென்று ராஜ குமாரியின் கதவைத் தட்டினார்கள் ராஜ குமாரி எழுந்து வந்தாள் ராஜ குமாரன் எழுந்து விடவில்லை தோழியர்கள் வெட்கத்தோடு நகைத்திடவே ராஜகுமாரியின் முகம் சிவந்தது சமாளித்துக் கொண்டு தன் மணாளனை அழைத்தாள் ராஜகுமாரி  அவன் அசைவு இன்றி தூங்கினான் அருகே சென்று உசுப்பியும் பார்த்தாள் அவனிடம் இருந்து எவ்வித ஓசையும் இல்லை கதறினாள் அருகே ஓடினார்கள் தோழியர்கள் நிலமையைப் பார்த்து திகைத்தார்கள்  ஆம் மாப்பிளை ராஜா இறந்து கிடந்தான்.  

(என்று கூறி முடித்தார் பாட்டி பொன்னுத்தாயி அருகே அமர்ந்திருந்த பேரனைப் பார்த்து கண்ணு ராசா பாட்டிக்கு இடுப்பு வலிக்குது ஒரு தலையணையும் தண்ணியும் கொண்டு வா ராசா என்றார் 

எல்லோருக்கும் சினிமா பார்த்து இடை வேளை கொடுத்தது போல் இருந்தது 


அடுத்து பாட்டி எதைச் சொல்லுவார் மாப்பிளை எப்படி இறந்திருப்பார் என்று அவர் அவர் தங்கள் மனதில் கேள்வியை ஓட விட்ட படியே தாங்களும் தண்ணீர் குடித்து விட்டு  நொறுவல் தீனியையும்  தூக்கிக் கொண்டு வந்து அமர்ந்தார்கள் முற்றத்தில் பாட்டி வாய் அலம்பி விட்டு நீரை அருந்தி முடித்ததும் தலையணையை மண்ணை சமமாக்கி விட்டு போட்டு அப்பாடா என்று குரல் கொடுத்த வாறே மெதுவாக சாய்ந்து கொண்டார்  குட்டீஸ் எல்லாம் ஒன்றாகச் சத்தம் போட்டனர் சொல்லுங்க பாட்டி என்று  உடனே பாட்டியும் ம்ம்ம் சொல்லுகிறேன் என்று கூறி ஆரம்பித்தார்
(தொடரும்)

கலா


 


Post a Comment

Previous Post Next Post