தன்முனைக் கவிதைகள்

தன்முனைக் கவிதைகள்


இழித்தலையும் பழித்தலையும்

முறுவலுடன் கடந்தேன்

பேரன்பும் பிரியங்களும்

உடன் பிறப்பாகின்றன!

Contempt and rebuke

I passed with a twist

Love and affection

Became siblings

அன்புச்செல்வி சுப்புராஜூ

 

கவிதைகளைத் தேடி

காடும் மேடும் அலைகிறேன்

ஒதுங்கிய மரத்தின் கிளையில்

கவிதைகளுடன் ஒரு மைனா

In search of poetry

I wander through the forest and the hills

On the branch of a secluded tree

A myna with poems

ஆர் ஜவஹர் பிரேம்குமார்.

 

கடும் குளிரில்

கதகதப்பை தருகிறது

இருகரங்கள் அணைத்த

தேநீர் கோப்பை

In extreme cold

Gives warmth

A cup of tea

Both hands clasped

ஜனனி குமார்


Also read MORE...மொழிபெயர்ப்புக் கவிதைகள் 


சலிப்பின் விளிம்புகள்

தழும்பும் நாட்களில்

களிப்பில் காளான்கள்

குடைவிரித்து நிமிருமே..

Edges of boredom

In the overflowing days

Mushrooms in merriment

Raising their heads by spreading their umbrellas

Murugeswari.M.Arumugam

 

கூட்டுப்புழுவை அருவெறுப்பாக

பார்க்கும் மனம்

வண்ணத்துப் பூச்சியைக்

கண்டதும் மகிழ்கிறது 

Disgusting mind

On seeing the cocoon

But it is pleasing

When that is a butterfly

 சு. பிரவந்திகா

 

# Translated by Raju Arockiasamy.



 


Post a Comment

Previous Post Next Post