முகபாவம்!

முகபாவம்!


சிலவேளை 
மலர்ந்த பூவை
முகர்ந்த மலர்ச்சியில்

சிலவேளை
தேள் கொட்டிய
வலியின் உணர்ச்சியில்

சிலவேளை 
மழையில் நனைந்த
குளிரின் அசைவில்

சிலவேளை
வெயிலில் நனைந்த
வெப்பத்தின் சலிப்பில்

சிலவேளை
செவிப்பறையை அதிரவைக்கும்
இடியின் நடுக்கத்தில்

சிலவேளை 
இன்பத்தில் ஆழ்த்தும்
இசையின் மயக்கத்தில்...

சொற்களுக்குள் என்ன
சூட்சுமம் வைத்திருக்கிறாய்
சுகந்தமே...

உன் உதடுகளிடையிலிருந்து
வெளிவருகையில் மட்டும்
பல விதங்களில் என்னை
பதம் பார்க்கின்றனவே 
இயல்பான வார்த்தைகளின்
முகபாவம்...


ஐ.தர்மசிங்
நாகர்கோவில்... 


 


3 Comments

  1. ஆசிரியர் அவர்களுக்கு
    வணக்கம்.

    இனிமையாக மலர்ந்திருக்கும் வேட்டை இதழில் எனது கவிதையும்.
    உங்கள் பணி சிறப்பானது.
    எனக்கு நீங்கள் வழங்கிவரும் வாய்ப்பு கைமாறு செய்ய முடியாதது.
    இதயம் நிறைந்த நன்றிகள்

    நேசமுடன்.

    ஐ.தர்மசிங்
    நாகர்கோவில்...

    ReplyDelete
  2. நன்றிகள்.தொடர்ந்தும் எழுதுங்கள்

    ReplyDelete
  3. சொற்களுக்குள் என்ன
    சூட்சுமம் வைத்திருக்கிறாய்
    சுகந்தமே.

    ஆஹா... அருமைக் கவிதை... வாழ்த்துகள் தர்மரே !

    ReplyDelete
Previous Post Next Post