திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-62

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-62


குறள் 758
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

கீள ரெண்டு யானை சண்டை போட்டுட்டு இருக்கும்போது, மலைமேல நின்னு அதை வேடிக்கை பாக்கலாம். அது நமக்கு பாதுகாப்பு. அது மாதிரி தான் மாப்ள, கடன உடன வேங்காம, கைக் காசை வச்சு தொழில் செஞ்சோம்னு வச்சுக்க.. நம்ம நல்ல பந்தோபஸ்தா இருக்கலாம்.

குறள் 759
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

மாப்ள.. நம்ம எதிராளிங்களோட கொட்டத்தை அடக்கணும்னா கையில பணம் இருக்கணும். பணத்தைத் தவிர வேற எதாலயும் அடக்க முடியாது. அதுக்காக பணத்தை சேத்து வைக்கணும் மாப்ள.

குறள் 760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு.

மருமவன..  நம்ம கிட்ட இருக்க வேண்டிய மூன்று அறம்,  பொருள் மற்றும் இன்பம். நல்ல வழியில் பொருளை நிறைய ஈட்டியவொளுக்கு, மத்த ரெண்டும் சுளுவா தன்னால சேர்ந்தே வந்திரும் மருமவன. 

குறள் 761 
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை.

மாப்ள.. ஒரு மன்னனிடம்  பல் வேறு வகையான படை பலம் நிறைந்திருக்கும். எந்த சவாலையும் சமாளித்து வெற்றி பெறக் கூடிய படையாக இருக்கும். இப்படிப் பட்ட  படை தான் மாப்ள, மன்னன்கிட்ட  இருக்கக் கூடிய செல்வங்கள்லேயே மிகப் பெரிய செல்வமாகும்.

குறள் 762
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்

தொல்படைக் கல்லால் அரிது.


மாப்ள.. ஒரு பெரிய போர்.. அதுல படைக்கு நல்ல சேதம். வீரர்களுக்கு வலிமை கொறைஞ்சு போவுது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், தடங்கல்களுக்கு அஞ்சாத நெஞ்சுறுதி, பழம் பெருமை வாய்ந்த படைக்கு மட்டுந்தான் இருக்கும். வேறு யாருக்கும் இருக்க முடியாது மாப்ள.
(தொடரும்)


 


Post a Comment

Previous Post Next Post