டிரம்பின் டுவிட்டர் கணக்கு தடை நீக்கம்!

டிரம்பின் டுவிட்டர் கணக்கு தடை நீக்கம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு கடந்த 2020ம் ஆண்டு முடக்கப்பட்டது. அவர் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டால் டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் எழுந்தன.

இதனையடுத்து, டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் டொனால்டு டிரம்பை சேர்க்க 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கின் தடையை எலான் மஸ்க் நீக்கினார். இதனால் 22 மாதங்களுக்கு பிறகு டிரம்பின் கணக்கு டுவிட்டரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் இனிமேல் டுவிட்டரில் தனது கருத்துகளை தெரிவிப்பார்….



 


Post a Comment

Previous Post Next Post