Ticker

6/recent/ticker-posts

"மக்களே, என் முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள்" -மலேசியாவின் புதிய பிரதமரை மாமன்னர் தேர்ந்தெடுப்பார்


மலேசியாவின் புதிய பிரதமர் யார் என்பதை அந்நாட்டு மாமன்னர் கூடிய விரைவில் தேர்ந்தெடுத்து அறிவிப்பார் என Bernama செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

எனவே புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் மாமன்னரின் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு அரண்மனை மலேசிய மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

புதிய அரசாங்கத்தை அமைக்கும் விவகாரத்தில் தேசிய முன்னணி, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அல்லது பெரிக்கத்தான் நேசனல் கூட்டணித் தலைவர் முஹிதின் யாசின் என எந்தத் தரப்பையும் ஆதரிக்காது என அறிவித்ததை அடுத்து, அரண்மனையின் அறிக்கை வெளிவந்துள்ளது.

தேசிய முன்னணியின் ஆதரவு இல்லாமல் எந்தக் கூட்டணியும் அரசாங்கம் அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையை எட்ட முடியாது.


 


Post a Comment

0 Comments