கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.
தந்தையிடம் நிரூபியுங்கள்
கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.
மனைவியிடம் நிரூபியுங்கள்
கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.
சகோதரனிடம் நிரூபியுங்கள்
கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.
சகோதரியிடம் நிரூபியுங்கள்
கடைசி வரை உனக்கு செய்யும் அனைத்தும் ஒரு சுமையே இல்லை என்று.
மகனிடம் நிரூபியுங்கள்
கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று
மகளிடம் நிரூபியுங்கள்
கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று
.
வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் அது கடலில் கொட்டிய பெருங்காயமே..!
தோற்று போனால் வெற்றி கிடைக்குமா
அம்மாவிடம் தோற்று போ
அன்பு அதிகரிக்கும்..
அப்பாவிடம் தோற்று போ
அறிவு மேம்படும்..
துணையிடம் தோற்று போ
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
பிள்ளையிடம் தோற்று போ
பாசம் பன்மடங்காகும்..
சொந்தங்களிடம் தோற்று போ
உறவு பலப்படும்..
நண்பனிடம் தோற்று போ
நட்பு உறுதிப்படும்..
ஆகவே தோற்று போ
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்...
அன்புடன் வாழுங்கள். மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments