Ticker

6/recent/ticker-posts

நீருக்கு முளைத்த கரங்கள்!


நீரில் எரியும் 
கல்லின் வலியை 
முயன்ற தூரம் 
எட்டிப்பார்த்து 
தொப்பென விழுகிறது 
நீர்....

ஆசையோடு ஆடிப்பாடிய 
கால்களுடன் துள்ளாடுகிறது 
இலையின் கிளைகளோடு
 கைகளில் குதித்தாடிய 
நீர்த்துளிகள்....

சோவெனும் மழையில் 
சாளரத்தில் மெல்ல மெல்ல 
வழிந்து வளர்கிறது துளிகள்...

இதழ்களை மொத்தமும் 
சிவந்து நின்றாலும் 
துளிகளாக பற்றிக்
கொள்கிறது கரங்கள் 
வளர்ந்த பனித்துளி
மழையாயினும்
சாரளாயினும்
பனியாயினும்
நீண்டுக்கொண்டே 
செல்கிறது
நீருக்கு முளைத்த கரங்கள்.....

கவிஞர் சே கார்கவி



 


Post a Comment

0 Comments