கார்குழல்!

கார்குழல்!


கார்குழலாள் என்று கூறி 
கார்மேகக் கூந்தல் 
அழகி என்று உரைத்து 
காணும்  பொழுதெல்லாம் 
கனகாம்பரத் தோட்டமெங்கும் 
கண்ணாலே என்னை சுற்றும் மாமா 

நான் மலராத மொட்டு
முதிராத மாங்காய்
உதிராத நாத்து 
கனியாத செவ்வாழை  ஆமா .

கார் கூந்தலை அள்ளி முடித்து 
நாகச் சடையிட்டு  சூடிக்கோ பூ என்று 
உன் கரம் கொண்டு முளமிட்டு 
மல்லிகை சரம் கொடுக்கும் மாமா 

நான் கட்டோடு கரும்பு 
நீ கிட்ட வந்து  முட்டும்  எறும்பு 
தொட்டு சுவைத்துப்புட்டால் 
விட்டுப் போகும் மானம் 
அது அவமானம்  ஆமா 

கார்குழலாள் என் 
மேல் மோகம்  கொண்டு 
நீ உருகிய பனி யாக தாகம் தீர்க்க 
அருவியாக ஓடி வரலாமா மாமா 

நான் பனித்துளி பட்ட புல்லு 
மழைத்துளி  தொட்ட நீர் 
பூங்காற்று தடவிய மலர் 
புயலில் சிக்கிய தென்னங்கீற்று
ஆனாலும் நான் கன்னி  
காதலுக்கு இல்லை வில்லி
நீ நில்லு தள்ளி  ஆமா 



ஆர் எஸ் கலா

 


Post a Comment

Previous Post Next Post