விரைவில்;மருத்துவர் பஃர்ஜானா பாத்திமா அவர்கள் வழங்கும் ஆரோக்கியக் குறிப்புக்கள்

விரைவில்;மருத்துவர் பஃர்ஜானா பாத்திமா அவர்கள் வழங்கும் ஆரோக்கியக் குறிப்புக்கள்

இன்று தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் மனிதர்களின்  ஆரோக்கியம்
மட்டும் நாளுக்கு நாள் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

தொழில்நுட்பம்தான் வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில் நமது ஆரோக்கியம் நம்மைவிட்டு தூரமாகிக் கொண்டிருக்கின்றது. 

நமது அன்றாட வாழ்கையில் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பழக்க வழக்கங்களை மறந்து நவீன காலத்து பழக்கங்களுக்கு அடிமையாகியதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நாமே வேட்டு வைதுத்துக்கொள்கின்றோம்.
   
உணவே மருந்து என்ற முன்னோர் கூறியதை நாம் மறந்துகொண்டிருக்கின்றோம். நாம் உண்ணும் உணவு நமது நாவுக்கு மட்டும் ருசியாக இல்லாமல் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கவேண்டும்.

இந்நிலையில் மருத்துவர் பஃர்ஜானா பாத்திமா அவர்கள் 
(கோயம்புத்தூர்., தமிழ் நாடு, இந்தியா)."நலம்வாழ வளமான மருத்துவப் பகுதி"என்ற ஆரோக்கியத் தொடரை வேட்டை வாசகர்களுக்காக விரைவில் வழங்க முன்வந்திருப்பதையிட்டு வேட்டை வாசகர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். 
வேட்டை 




வழங்குபவர் : மருத்துவர் பஃர்ஜானா பாத்திமா
கோயம்புத்தூர்., தமிழ் நாடு, இந்தியா.

உலகளாவிய வேட்டை மின்னிதழின் வாசக நேயர்கள் அனைவரும் நலம் வாழ வாழ்த்துக்கள்.
         
இன்று நாம் நலமுடன் வாழ பல விதமான  முயற்சிகள் எடுத்து வருகின்றோம். ஆனால், ஏதோ ஒரு வகையில் அவை அனைத்தும் ஒரு சில பலன்களைத் தவிர நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மிகச் சிறிய நன்மைகளைத் தவிர முழுமையான பலன் தரவில்லையே ஏன்? 

இன்று நவீன மருத்துவ உபகரணங்களும் அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை களும் உயிர் வேதியியல் துறையில் நமது உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களைக் கணிக்க ஏராளமான அதிநவீன கருவிகள் வந்துவிட்ட நிலையிலும் நமது ஆரோக்கியம் மட்டுமே கேள்விக் குறியாகவே நிற்கிறது. 

நோய்களை முன்னமே கணித்து கூறக்கூடிய நிலையிலிருந்தும் ஏன் நாம் நம் நோய்களை குணப்படுத்த மட்டும் முடிவதில்லை? ஆனால் சிகிச்சை என்ற பெயரில் கட்டுப்படுத்த மட்டுமே செய்கின்றன.
 
மேலும் வயதாகிய நிலைகளில் ஏற்படும் இறப்பைத் தவிர்த்து, இளம் வயதிலேயே உயிரைப் பறிக்கும் நோய்களுக்கு நாம் ஆட்பட்டு விடுகின்றோம் . 

இதற்கு காரணம் என்ன?
இதை எப்படி போக்குவது?
வளரும் தலைமுறைகளின் ஆரோக்கியத்தினை எப்படிக் காப்பது?
நோய்களைக் குணப்படுத்த முடியுமா? 
அல்லது கட்டுப்படுத்த மட்டுமே முடியுமா? 
ஆட்கொல்லி நோய் என்றால் என்ன?
 எவ்வாறு நோய் வரும் முன் காப்பது?
 
இன்னும் ஏராளமான வினாக்களுக்கு விடை அளிக்கவே இந்த தொடர் .
முதலில் நாம் எதைக் கடைபிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்? ஆரோக்கியம் என்றால் என்ன? நான்ஆரோக்கியமாக இருக்கின்றேனா ?இல்லையா,? என்பதற்கு வரைமுறை என்ன? என்பதை பற்றி நாம் முதலில் தெரிந்து கொள்ளலாம்.

                   

Post a Comment

Previous Post Next Post