Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா 141


கல்லடியை நோக்கியபடி, பெரியவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த கானகத்து  மக்களுக்கு  எமாற்றமே ஏற்பட்டது!

வேரேணியில் செரோக்கி மட்டுமே வருவதைக் கண்டதும்  அவர்கள் குழம்பிப் போய்விட்டனர்.

ஏணியை விட்டும் இறங்கி  'பெரியகல்' பீடத்தில் காலடிவைத்த செரோக்கிக்கு குழம்பிப்போயிருந்த  அம்மக்களை நிதானப்படுத்துவதில் போதும் போதுமென்றாகிவிட்டது.

அவர்களை அமைதி காக்கவைத்து,  ஒரு நிலைக்குக் கொண்டுவந்தபின்,
சூரியன் மத்திக்கு வந்ததும்,  தான்  வருவதாகப் பெரியவர் ஒப்புக் கொண்டதை   அவன் வீறிட்டுக்கூற வேண்டியேற்பட்டது!

அதன் பின்னர்  மிகவும் சாணக்கியத்தனமாக  அவ்விடத்திலிருந்து நகர்ந்து, தன் மனை நோக்கி நடக்கலானான்.

தன் மனையின் பண்கதவைத்  திறந்தவன், ரெங்க்மாவைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தான். 

அலங்காரமாக உடுத்திப் பார்க்கப் பசுந்தாக இருந்தாள் அவள்!  ஆனால் அவளது கண்களில் மாத்திரம் கோபக்கனல் பறந்து கொண்டிருந்ததை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. கோபத்தின்போது அவளது முகசுபாவத்தை அவன்  இன்றுதான் முதன் முதலாகக் காண்கின்றான்.

அதற்கான காரணத்தை எளிதாகப் புரிந்துகொண்ட அவன், அவளைச் சமாதானப்படுத்துவதில் தனது மூலோபகரணங்கள் சகலதையும் ஈடுபடுத்தலானான்.

'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பார்கள்! அந்நிலையில்தான் இப்போது ரெங்க்மா இருந்தாள்!

விடியலின்போது செரோக்கியை வழியனுப்பிவைத்துவிட்டு, தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஈடுபட்ட அவள், நீண்ட நேரமாக செரோக்கியின் வருகைக்காகக் காத்திருந்து பொறுமை இழந்துவிட்டாள்!

வனப்பகுதி மக்களின் பெரியதொரு கொண்டாட்டம்தான் இந்தத் தீ வைப்பு நிகழ்வு. இதற்கென இம்மக்கள் தாமே  துணிமணிகளை  அலங்காரமாகச்  செய்து கொள்வார்கள்.   அவற்றை உடுத்தி,  கொண்டாட்ட நிகழ்வின்போது  ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்வார்கள்.

அந்தவகையில் தன்னை அலங்கரித்து, உடுத்திக் காத்திருந்த அவளுக்கு செரோக்கியின் வருகைத்தாமதம் கோபத்தைக் கொண்டு வந்துவிட்டதில் நியாயம் இல்லாமலில்லை!

கொண்டாட்டம் முடிந்ததும், நகருக்கு அழைத்துச் சென்று, "வறுத்த ஐஸ்க்ரீம்" வாங்கித்தருவதாகக் குறிப்பிட்டதும், அவள் துள்ளிக்குதித்தாள்!

அவளது கோபம் சட்டென மறைந்து போனதை அவள் அவனை வாறியணைத்துக் கொண்டதன் மூலம் உணரமுடிந்தது!
(தொடரும்)




 


Post a Comment

0 Comments