புகழ்-- 24
நல்லதைச் செய்தால் நற்புகழ் கிடைக்கும்
ஈகைக்குணத்தால்வரும்புகழே
உலகவாழ்வின்நற்பயனாம்!
ஏழைஎளியோர்வாழ்வதற்குக்
கொடுக்கும்பண்புதரும்புகழை
உயர்ந்தோர்பேசுவார்பெருமையுடன்!
அந்தப்புகழேநிலையாகும்!
விண்ணகம்தேவரைப்போற்றாமல்
கொடுப்போரைத்தான்புகழ்ந்திருக்கும்!
கொடுத்துச்சிவந்தோர்செல்வங்கள்
குறையக்குறையப்புகழ்வளரும்!
உலகைவிட்டேமறைந்தாலும்
நிலைக்கும்அப்புகழ்சான்றோர்க்கு!
ஈகைப்புகழேஅடையாளம்!
புவியேவணங்கிமதித்திடுமே!
ஈகைமனமேஇல்லாமல்
காட்சிப்பொருளாய்வாழ்வதற்குத்
தோன்றாமல்தான்இருந்திடலாம்!
புகழைச்சேர்க்கத்தெரியாதோர்
தங்கள்குறையைஅறியாமல்
தம்மைஇகழும்மற்றவரை
நொந்துகொள்வதால்என்னபயன்?
இறந்தபின்நிலைப்பதுஇப்புகழ்தான்!
புகழில்லாதமனிதரையோ
தாங்கும்நிலமோதரிசாகும்!
பழியேஇன்றிப்புகழுடனே
வாழ்பவர்உயிருடன்வாழ்பவராம்!
பழியைச்சுமந்துவாழ்பவனோ
பாரில்என்றும்நடைப்பிணந்தான்!
அருள் உடைமை-- 25
அனைவரிடமும் இரக்கம் காட்டு
இழிந்தவ ரிடத்திலும் செல்வமுண்டு!
அருட்செல்வம் ஒன்றே சிறந்ததாகும்!
அருளுடன் வாழ்தல் நெறியாகும்!
அதுவே அருமைத் துணையாகும்!
அருள்மனங் கொண்டே வாழ்பவர்க்கு
இருள்சூழ் வாழ்க்கைத் துன்பமில்லை!
உயிரினந் தன்னைக் கருணையுடன்
காத்தே வாழும் சான்றோர்கள்
தன்னுயிர் எண்ணி அஞ்சுகின்ற
கோழை நிலைதான் இங்கில்லை!
இருளைப் பரப்பி அருள்மறந்தோர்
அறத்தை மறந்தே வாழ்விழந்தோர்!
பொருளோ இன்றி இவ்வுலக
வாழ்க்கை இங்கே இல்லைதான்!
அருளோ இன்றி அவ்வுலக
வாழ்கை அங்கே இல்லைதான்!
பொருளை இழந்தால் மீண்டுமிங்கே
பொருளைப் பெற்றே வாழ்ந்திடலாம்!
அருளை இழந்தால் இழந்ததுதான்!
புத்தகம் சொல்லும் மெய்ப்பொருளை
அறிவில் லாதோர் காண்பதுபோல்
அருளில் லாதோன் அறச்செயலாம்!
எளியவர் களையோ துன்புறுத்தும்
எண்ணம் சிறிதும் வேண்டாமே!
வலியவர் உன்னைத் துன்புறுத்தும்
கோலம் வருமே துள்ளாதே!
புலால் மறுத்தல்-- 26
இறைச்சி உண்பதைத் தவிர்
நமது உடலின் வளர்ச்சிக்கு
மற்றொரு உடலைப் புசிப்பவனின்
நெஞ்சில் கருணை இருக்காது!
உள்ளத்தில் அருளும் இருக்காது!
இரக்கம் கொடுக்கும் நற்பயனோ
இறைச்சி உண்பவர்க் கில்லையம்மா!
வன்முறை கொண்ட உள்ளத்தில்
இரக்கமோ துளியும் இருக்காது!
உயிரைக் கொன்று தின்பவனின்
நெஞ்சில் அருளும் இருக்காது!
ஊனை உண்னல் பாவந்தான்!
உயிர்க்கொல் லாமை அறமாகும்!
புலாலை மறுத்தால் பிறஉயிர்கள்
உலகில் வாழும் வாய்ப்புண்டு!
புலாலை வெறுக்கும் நிலையெடுத்தால்
விற்கும் தொழிலே இருக்காது!
இறைச்சி, உயிரின் புண்ணாகும்!
உண்பதை அறவே ஒழிக்கவேண்டும்!
உயிரைப் பிரிந்த உடல்தன்னை
அறிவுடை யோர்கள் உண்ணமாட்டார்!
ஆயிரம் யாகங்கள் செய்வதினும்
உயிரைக் கொன்று உண்ணாமல்
வாழ்வதே என்றும் மேலாகும்!
புலாலை வெறுக்கும் மாந்தரையோ
புவியே வணங்கும் கைகூப்பி!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments