Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-68


குறள் 669 
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

தம்பி.. செஞ்சு முடிச்ச பொறவு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு வேலையைச் செய்யும் போது தும்பம் வரலாம். அப்பக் கூட துணி்ஞ்சு நின்னு அந்த வேலையை செஞ்சு முடிக்கணும் தம்பி. 

குறள் 670
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.

தம்பி..நீ எப்படிப்பட்ட வலிமை உடையவனாவும் இருக்கலாம். ஆனா எடுத்துக்கிட்ட வேலையில உறுதி இல்லாதவனா இருந்திட்டா, இந்த ஒலகம் ஒன்னை ஏத்துக்காது தம்பி. 

குறள் 671
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

தம்பி.. ஒரு வேலைல எறங்க முடிவெடுக்க ன்னு வச்சுக்கோ.. அதுக்கு முன்னால, அந்த வேலயைப் பத்தி நல்ல தெரிஞ்சுக்கிட்டு துணிச்சலோடு எறங்கணும். முடிவெடுத்த பொறவு  காலம் தாழ்த்தினா அது நல்லது இல்லை தம்பி. 

குறள் 673
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

தம்பி.. செய்ய முடியும்னா, அந்த வேலையைச் செஞ்சு முடிக்கது நல்லது. முடியலயா? பரவால்ல. அதை எப்படிச் செய்யணுங்கிற வழி முறையை தெரிஞ்சுட்டு வேலையை செஞ்சு முடிக்கணும். 

குறள் 674
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

தம்பி... நீ எடுத்திருக்க செயல்..அழிக்க வேண்டிய பகை.. இந்த ரெண்டையும் முழுசா முடிக்கணும். அரை குறையா விட்டுட்டா, முழுசும் அணையாத தீ மாதிரி கேடு தான் உண்டாக்கும் தம்பி. 
(தொடரும்)




 


Post a Comment

0 Comments