Ticker

6/recent/ticker-posts

Ad Code



தோனி மகளுக்கு ஸ்பெஷல் கிப்ட் - மெஸ்ஸி கொடுத்த ஷாக்


இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் தோனி எந்தளவிற்கு கிரிக்கெட் மீது பித்துப்பிடித்தவரோ அது அளவிற்கு கால்பந்து மீதும் தீரா காதலைக் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. 

அவர் சிறுவனாக இருந்த போது, கிரிக்கெட் விளையாட்டில் பயிற்சி பெறுவதற்கு முன் கால்பந்தில்தான் பயிற்சி பெற்று வந்தார். மேலும், கால்பந்தில் கோல் கீப்பராக ஆக வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்திருக்கிறது. தவிர, கிரிக்கெட் வீரராக மாறிய பின்னும், கால்பந்து போட்டிகளை நேரில் காண செல்வது, பயிற்சியின்போது அவ்வப்போது கால்பந்து விளையாடுவது என தனது கால்பந்து காதலை தோனி தொடர்ந்து சமந்து வந்தார். 

சமீபத்தில் நடந்த முடிந்த பிபா கால்பந்து உலகக்கோப்பையைும் தோனி கத்தாரில் வந்து கண்டுகளித்தார் என்பது இதற்கு மற்றுமொரு உதாரணம். மேலும், முன்பு ஒருமுறை ஒரு தொகுப்பாளர் 'உங்களுக்கு பிடித்த காலபந்து வீரர் யார்?' என்ற கேள்விக்கு, ஜிடேன், மெஸ்ஸி என தோனி பதிலளித்திருப்பார். அந்த அளவிற்கு கால்பந்து மீதும், மெஸ்ஸி மீதும் மரியாதையை கொண்டிருந்பவர் தோனி. 

அதேபோல, தோனியின் மகளான 7 வயதான ஷிவா சிங் தோனியும் மெஸ்ஸியின் தீவிர ரசிகையாவார்.
இந்நிலையில், மெஸ்ஸியிடம் இருந்து ஷிவாவுக்கு பிரத்யேக் பரிசு ஒன்று வந்துள்ளது. மெஸ்ஸி தன்னுடைய அர்ஜென்டீனா ஜெர்ஸியில் PARA ZIVA (ஷிவாவிற்காக) என எழுதி அதன் கீழ் கையெழுதிட்டு தந்துளளார். இதுகுறித்த புகைப்படம், ஷிவா சிங் தோனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது. 

அந்த பதிவில், மெஸ்ஸியின் ஜெர்ஸியை கண்டு மகிழ்ச்சியுடன் காணப்படும் ஷிவாவின் புகைப்படங்களுடன்,"தந்தையை போல மகளும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தந்தை தோனியை போலவே, மகள் ஷிவாவிற்கும் கால்பந்து மீது தீரா காதல் உருவாகியுள்ளது என்பது இந்த பதிவில் காணலாம். 

கத்தாரில் நடைபெற்ற பிபா உலகக்கோப்பை 2022 தொடரில், 36 ஆண்டுகளுக்கு பின் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா அணி கோப்பை வென்றிருந்தது. அத்தொடரில் மெஸ்ஸி, கோல்டன் பால் விருதை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
zeenews


 


Post a Comment

0 Comments