ராஜகுமாரியின் சுயம்வரம்-3

ராஜகுமாரியின் சுயம்வரம்-3

பாட்டி தொடங்கினார் அனைவரும் அமைதியானார்கள்  
ராஜாவின் வார்த்தைக் கேட்ட ராணியாருக்கும் அளவற்ற மகிழ்ச்சி . இதை உடனே மகளிடம் கூறிட வேண்டும். என கணவரிடம் கூறிக் கொண்டே இருவரும் தங்களது மகள் அமர்ந்து காத்தாடும் இடத்துக்கு விரைந்தார்கள் . தாயோடு தந்தையும் இணைந்து வருவதைக் கண்ட ராஜகுமாரி .
உடனே ஊஞ்சல் விட்டு எழுந்தாள் .

கூடி இருந்த தோழிகளும் வழி விட்டு நகர்ந்து விட்டார்கள் .மகளை இருக்குமாறு கூறி விட்டு .தாங்களும் அருகே அமர்ந்து விட்டார்கள்  .மகளிடம் தோளைத் தொட்டு மகாராணியார் தான் மெதுவாகக்கதையை ஆரம்பித்தார்.மகாராஜா கொண்டு வந்த கதைதனைக் கூறி விட்டு மகளின் முகத்தைப் பார்த்தார் .

அருகே இருந்த தந்தையைத்  திரும்பி நோக்கினாள் மகள்.

 தந்தையின் கண்களும் ஏக்கத் தோடு தன்னை பார்ப்பதை உணர்ந்தாள் .

சில நிமிடங்கள்  மௌனம் நிலவியது அங்கே .பின்னர் மகளே மௌனம் களைத்தாள் சரி உங்கள் சம்மதம் என்றாள். வாரி அணைத்து முத்தமிட்டாள் தாய் .தந்தையோ தலை மேல் கை வைத்து ஆறத்தழுவினார் .அழவற்ற மகிழ்வோடு இருவரும் மகளிடம் இருந்து விடை பெற்றனர்  .

மறு நாள் காலை மந்திரியை அழைத்து மகளது சுயம்வரம்  பற்றி ஆலோசனை கேட்டு மந்திரியாரின் அறிவுரைகளுக்கு இணங்க ஏற்பாடு செய்தார் .சபையைக் கூட்டி அறிவிப்பு  கொடுத்தார் .

ஊர் மக்களுக்கும் இச் செய்தினை அறிவித்தார்கள் மக்களும் மனதார ஏற்றுக் கொண்டனர் . காரணம் மக்களுக்கு அரசர் குடும்பத்தின் மேல் அந்தளவுக்குப் பிரியம் ஏன் பக்தி என்று கூட சொல்லிடலாம்.  ராஜகுமாரியின் மறு சுயம்வரம் பற்றிய செய்தி எதிரியான ராணி பூங்குழலியின் காதுக்கும் எட்டியது அதிர்ச்சி உற்றார். என்னஅது அதே மகாராஜா தனது இரண்டாவது மகனுக்கு சுயம்வரம் நடத்த முடிவு பண்ணி விட்டாரா .இதை நடக்கவே விடக் கூடாது என்று கர்ச்சித்தாள் .

தாமே நேராக சென்று மன்னரைச் சந்தித்து பேசிட வேண்டும். என முடிவு எடுத்துக் கொண்டாள் .

உடனே தான் வரும் செய்தியை ஓலையில் எழுதி புறா மூலம் அறிவித்து விட்டாள் . எதுகும் புரியாத மகாராஜா  எதற்காக திடீர் விஜயம் செய்கின்றார்கள் பூங்குழலி மகராணி என மந்திரியாரிடம் கேள்வி தொடுத்தார் .மந்திரியும் தனக்கும் தெரியாதெனவும் தானும் குளப்பத்தில் இருப்பதாகவும் கூறி விட்டார் . சரி அவர்கள் எதற்கு வேண்டுமானாலும் வரட்டும் ஒரு அரசியை நாம் அவமதிப்பது தவறு அவர்களை நல்ல முறையில் வரவேற்க ஏற்பாடு செய்து விடுங்கள் என்று கூறி விடை பெற்று தனது இருப்பிடம் நுழைந்தார்

 வலாங்காபுரி மகாராஜான்  கூறியது போல் பூங்குழலி மகாராணியும் வந்து விட்டாள் வரவேற்பில் குறை இல்லை  அவர்களுக்காக ஒதுக்கப் பட்ட இருக்கையில் அமர்ந்தனர் எல்லோரும் மரியாதை நிமித்தம் வணக்கம் தெரிவித்து விட்டு உரையாடலை ஆரம்பித்தனர் அப்போது பணிப்பெண் பழரசம் கொண்டு  பகிர்ந்தார் பழச்சாறு அருந்திய வாறே பூங்குழலி ராணி கேட்டாள் அரசே நான் கேள்வி பட்ட செய்தி உண்மை தானா என்று என்ன செய்தி மகாராணி என மந்திரியார் வினாவினார்  

உங்கள் செல்ல மகனுக்கு மீண்டும் அதே பெண்ணை சுயம்வரம் செய்யப் போவதாக செய்தி அறிந்தேன் என்றார்  ஆமாம் ராணி நாங்கள் அனைவரும் பேசி எடுத்த முடிவு தான் இவை என. வலங்காவுரி ராஜா கூறவே  பூங்குழலி சிரித்துக் கொண்டே சொன்னால் முட்டாள் தனமாக உள்ளது ராஜா இந்த முடிவு அவள் தோசமான ஒரு இளவரசி  அடுத்த பிள்ளையையும் பலியிடப் போகும் முடிவுதான் இவை வேண்டாம் அரசே இந்தை சுயம்பரத்தை நிறுத்தி விடுங்கள் எனக் கூறவே ராஜா சற்று கோபமாகவே பதில் கொடுத்தார் இல்லை ராணி எடுத்த முடிவு எடுத்தவை தான் கொடுத்த வாக்கு கொடுத்தவை தான் தங்கள் அக்கறைக்கு நன்றி தங்களது வருகை மகிழ்வை தருகிறது  சுயம்வரம்  நடைபெறும் நாள் அன்றும் அழைப்பு வரும் கண்டிப்பாக வாருங்கள் என்று கூறி புன்னகைத்தார் 

இதற்க்கு மேல் நம் பேச்சு எடு படாது என சிந்தித்த ராணி விடை பெற்று புறப்பாட்டாள் உண்மையிலே அவள் அக்கறையோடு தான் உரைத்தாள் காரணத்தை சொல்லாமல் மறைத்து விட்டாள் 
(தொடரும்)
கலா


 


Post a Comment

Previous Post Next Post