திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-64

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-64


குறள் 768
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை

படைத்தகையால் பாடு பெறும்.

மாப்ள.. போர்ல சண்டை போட வீரம் வேணும். எதிரியை எதுத்து நிய்க்கக்கூடிய ஆற்றல் இருக்கணும். இந்த ரெண்டும் இல்லைன்னா கூட பரவால்லை.. படையின் அணிவகுப்பின் அழகு மிகச் சிறப்பா இருக்கணும் மாப்ள. 

குறள் 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.

மாப்ள... ஆர்வமுள்ள தொண்டர்கள் நெறைய இருக்கலாம். ஆனாலும் அவங்களை வழி நடத்த சரியான ஒரு தலைவன் இல்லை ன்னு வச்சுக்க.. அந்த தொண்டர் படைக்கு எந்த பெருமையும் கிடையாது மாப்ள. 

குறள் 771
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்.

ஏல... ஏந் தலைவனையால எதுத்து நிய்க்கப் போறே. .. பூடந் தெரியாம சாமியாடுதன்னு நெனய்க்கேன். இதுக்கு முந்தி எதுத்து நின்ன பயலுவொ எவனையும் ஆளைக் காங்கல. கல்லாயிட்டானுவொ. பாத்துக்கொ. 

குறள் 773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு.

மாப்ள.. எதிராளியை எதுத்து நிய்க்கக்கூடிய வீரம் இருந்தா அது   பேராண்மை.. ஆனா அந்த எதிரிக்கு ஒரு தும்பம் வரும்போது, உதவி செய்தது இருக்கே, அது அந்த ஆண்மையிலேயே ஒசத்தி மாப்ள... 

குறள் 774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்

மெய்வேல் பறியா நகும்.

தம்பி... நடக்கக்கூடிய போர்ல, ஒரு வீரன் கையில இருக்க வேல் ஒண்ணை, யானை மேலே வீசி எறிஞ்சிருதான். இப்பம் இன்னொரு வேல் வேணும். அங்க இங்க தேடிப் பாத்த பொறவு, தன்னோட நெஞ்சுலயே குத்தி இருக்க இன்னொரு வேலை பாத்திருதான். ஒடனே அதை புடுங்கி எடுத்து அடுத்தாப்ல சண்டையை மகிழ்ச்சியோட தொடருவான் தம்பி. 
(தொடரும்)



 


Post a Comment

Previous Post Next Post