மௌனம் உதிர்க்கும் ஒரு சொல்!

மௌனம் உதிர்க்கும் ஒரு சொல்!


பல ஏக்கர் நிலம் கண்டு
நகம் வெட்டி
கைமடித்து
துளி நீர் தெளித்து
ஒன்றுக்கு ஒன்று அளவேற்று
சதைகிழித்து
பிள்ளை எடுப்பதுபோல்
மண்தாயின் வயிற்றோடு
குழிகொண்டு
கசடாகவும் கருப்பாகவும்
துளிவேர் கீழ்கொண்டு
மேல் பிளந்து
பச்சையத்தை மொத்தம் கக்கிய
பச்சிலை செடி துளிர்த்த
விதையினை விருப்பமாவென 
அறியாத குழியில் 
திணித்து புதைக்கிறேன்..,

ஊற்றியும் நீரினை ஏற்கவில்லை
உரமிட்டும் உடலோடு 
சேர்த்துக் கொள்ளவில்லை
கீறிக்கீறிப் பார்த்திட 
சிறுபிள்ளையும் அல்ல
வேண்டாதவரையும்
வேண்டுமென ஏற்று துளிர்த்த
மண்ணோடு கொட்டென 
கொட்டுகிறது மழை...

விதைத்த விதையெல்லாம்
சட்டென வளர்கையில்
கண்ணீர் மழ்கிட
ஒவ்வொரு துளியும்
சொல்லிவிடுகிறது
மௌனத்தில் துளிர்த்து 
உதிர்த்த நன்றியெனும் 
ஒரு சொல்லினை.......!

கவிஞர் சே கார்கவி




 


Post a Comment

Previous Post Next Post