திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-65

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-65


குறள் 775
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்

ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மருமவன... எதிரிங்களை கோவமா பாத்துக் கிட்டு இருக்கும் போது, அவங்கள்ல ஒருத்தன் வேலால எறிஞ்சாமின்னு வச்சுக்க. அதைப் பாத்து கண்ணை சிமிட்டிறக் கூடாது. அப்படிப் பண்ணிட்டா,  அது போர்ல தோத்து ஓடுததுக்கு சமம் மருமவன. 

குறள் 776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து.

மாப்ள.. ஒரு வீரன் தான் வாழ்ந்த நாட்களை நினைத்துப் பாப்பான். விழுப்புண் படாத நாட்கள் எல்லாம், தன் வாழ் நாளில் வீணான நாட்கள் என்று நினைத்துக் கொள்வான் மாப்ள. 

குறள் 777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

மாப்ள... எல்லா பக்கத்திலிருந்தும் வரக்கூடிய புகழுக்காக, உயிரைப் பத்தி கூட கவலைப்படாத, ஒரு வீரன் இருப்பாமுல்லா.. அவனோட கால்ல கட்டப்படும் வீரக்கழலுக்கு தனிப் பெருமை தான் மாப்ள.. 

குறள் 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர்குன்றல் இலர்.

மருமவன... போராட்டம்னு வந்துட்டா, தலைவனே வேண்டாம்னு சொன்னாலும், உயிரையும் பொருட் படுத்தாம களத்துல கடமை ஆற்றுதான் பாரு, அவந்தான் போற்றுதலுக்கு உரியவன் மருமவன. 

குறள் 779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே

பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

மாப்ள.. எதிராளியை சோலி் முடிச்சிட்டுதான் மறு வேலைன்னு ஆவேசமா போருக்கு போறவன், சண்டையில உயிரை விட்டுருதான். அதுக்காக  அவனைப் போய் சொன்னபடி செய்யாதவன் ன்னு யார் மாப்ள சொல்லுவா? 
(தொடரும்)


 


Post a Comment

Previous Post Next Post