Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-7

தொடர்ந்தார் பாட்டி 
அது என்ன அறிவிப்பு என்று தெரியுமா  தன்னோட மகளை திருமணம் செய்து மகளோடு வாழும் அந்த ஆடவனே தான் இந்த நாற்காலியில் அமர வேண்டும் அது வரை இது வெறுமையாகவே இருக்கும் ஆனால் அதிகாரம் என் கையில் அனைத்துமே எனது பார்வைக்குக் கீழ் நான் வைப்பதே சட்டம் என் அதிகாரத்தின் போது சேட்டைக்கு இடம் இல்லை நான் என் கணவர் உங்கள் மகாராஜா போன்று இல்லை  தயவுதட்சனை பார்க்க மாட்டேன் குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் ஆயுள் தண்டனை அல்லது தலை துண்டிக்கப் படும்   என தண்டுரம் அடித்து ராணியின் கட்டளைகளை அறிவித்த வாறே காவலர்கள் வீதி வீதியாய் பவனி வந்தார்கள்  மக்கள் எல்லோரும் பீதியோடு கவனித்துக் கொண்டு இருந்தார்கள்  . அப்போது  அரண்மனையில் பணிவுரியும் ஒரு சில பெண்கள் கூடி பேசினார்கள் அய்யய்யோ  மகாராஜா இருக்கும் போதே இந்த மகாராணி சரியான கெடுபிடி  இனி சொல்லவே வேண்டாம் அந்த நல்ல மனிதரை இறைவன் பறித்து விட்டானே என்று கூறி பெருமூச்சு இறைத்தார்கள்.

(ஏன் பாட்டி அப்போ இந்த மகாராணி கெட்டவங்க. தானா உண்மையிலே என்று கதை கேட்க வந்திருந்த எதிர் வீட்டு ராணியோட மகள் கண்மணி கேட்டாள். அவள் கேள்விக்குப் பாட்டி பதில் கூறும் முன்னே தாய் ராணியே வாயைத் திறந்தாள் அடியேய் ஏன்டி இப்போ குழப்புகிறாய் பொறுமையாக இரு பாட்டி தான் சொல்லிக் கொண்டு இருக்காங்க தானே முந்திரிக் கொட்டை என்று கூறி மகளை அதட்டினாள்    ஆமா ஆமா முந்திரிக் கொட்டை பொருந்தமான பெயர் தான் என்று சொல்லி  கேலி செய்தான் உதயன் ஏன் என்றால் அவள் சின்ன உருவம் கட்டையான ஆள் அதுக்குத்தான் அவன் அந்த வார்த்தையை சொல்லி சிரித்தது. இதைக் கேட்டதும் எல்லோருமே சிரித்து விட்டார்கள் 9 வயதே ஆன கண்மணிக்கு அழுகை வந்து விட்டது சரி சரி அழாதே இவனும் லூசு தான் எனக் கூறி  ஒவ்வொருவரும் ஆறுதல் படுத்தி  அழுகையை நிறுத்தி விட்டார்கள்)

பாட்டி கதையைத்  தொடந்தார் அறிவிப்பு முடிந்து மறு நாளே மீண்டும் ஒரு அறிவிப்பு விடுத்தார் நாட்டு வைத்தியம் தெரிந்தோர் அனைவரும் தன் மாளிகைக்கு வரும் படியும் அங்கே தங்கி இருந்து தன் மகளுக்கு வைத்தியம் பார்க்கும் படியும் தன் மகளை குணமடையச் செய்யும் மருத்துவருக்கு விலை மதிப்பு  அதிகம் உள்ள பொருளும் பொன்னும் கொடுக்கப் படும் என்று அறிவித்தனர்  . இதுவரையும் ஆங்கில வைத்தியமே செய்து வந்தனர் .மகளின் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் காணாதமையால் நாட்டு வைத்தியம் செய்து பார்க்கும் படி மந்திரி கொடுத்த ஆலோசனைக்கு இணங்கி இந்த முடிவினை எடுத்தார் மகாராணி. 

என்ன ஒரு ஆச்சரியம் பூண்டு இடிப்போர் கூட தாம் வைத்தியர் என்று கூறிக் கொண்டு வந்து நின்றார்கள். சிலரது கையில் குப்பை மேனி   கட்டும் தென் பட்டது. இதைப் பார்த்த அரண்மனை பணியாளர்கள் கிண்டல் செய்து சிரித்தார்கள். என்னப்பா இது வைத்தியம் பார்க்க வரச் சொன்னாள் சமையல் காரன் போல் கீரையும் கையுமாக நிக்கின்றீர்கள் என்று கேட்டு விட்டு கூடி நின்று சிரித்தார்கள்.  ஒரு சிலர் தலையைக் குனிந்தார்கள் சிலர் எதிர்த்துப் பேசினார்கள் உங்களுக்கு இது தேவை அற்ற கேள்வி மகாராணி கேட்டால் பதில் கூறிடக் கடமை உண்டு உங்கள் கேள்விக்கு எங்களிடம் இல்லை பதில் எனக் கூறி முறைத்தார்கள். 

(மாமி  குப்பை மேனியும் மருந்து தானே ஏன் அவங்க கேலி பண்ண வேணும் என்று பாட்டியோட சின்ன மருமகள் கேட்டாள்  .உடனே அவளோட புருஷன்  துரை சொன்னான் நல்லாக் கேட்டாயடி பலே வா என்றான்  முடிச்ச கையோடு தன் தாயைப் பார்த்து அதாவது பாட்டியைப் பார்த்து சொன்னான் பார்த்தையா அம்மா உன் மருமகள் எவ்வளவு அறிவாலி என்று   குப்பை மேனியை வைத்து பைத்தியத்துக்கு வைத்தியம் செய்யப் போறாளாம் என்று கூறி தலையை ஆட்டினான்.  

திரும்பி மனைவியைப் பார்த்து கூறினான் போடி போடி லூசு  சிறு பிள்ளை போல் பேசாமல் போய்  கொசு பத்தியை கொழுத்தி வை என்றான்)
(தொடரும்) 
கலா


 


Post a Comment

0 Comments