தாரணி போற்றும் தமிழ் மறை!

தாரணி போற்றும் தமிழ் மறை!


திருவள்ளுவரின்
திருக்குறள்
மொழி மாற்றம்
கண்டதுண்டு
பொருள்மாறவில்லை .

திருத்தங்கள்
இல்லாத  தமிழ் மறை
திணிக்கப் பட்டதாக
குற்றம் கண்டோரும் இல்லை.

ஆயிரம் ஆண்டின் முன்னே  
உரு பெற்ற நூல் திருக்குறள்  
கல் தோன்றி மண் தோன்றும் முன்னே  
தோன்றிய தாய் மொழியான 
தமிழ் மொழியை உலகம் எங்கும் 
அறியச்செய்த நூல் திருக்குறள்.

காமத்துப்பால் என்னும்
ஒரு வரி கொடுத்து
காதலுக்கும் காமத்துக்கும்
உள்ள வேறு பாட்டை விளக்கிய நூல்
திருக்குறள்.

தமிழ் மறை போற்ற
எத்தனையோ நூல் உண்டு
அத்தனையிலும் மாறு பட்டு
வேறு பட்டு விளங்கும் நூல் திருக்குறள்.

விரும்பிப் படித்து திருந்தி
வாழ வழி திறந்து விட்டு
தமிழின் பெருமையைத்
தவழ விட்டு தாரணி போற்றும்
தமிழ் மறை கொண்ட நூல்
திருக் குறள் என்னும்  திருவள்ளுவர் 
தொகுத்த நூல்.

கலா


 


Post a Comment

Previous Post Next Post