Ticker

6/recent/ticker-posts

Ad Code



தமிழ் தெய்வம்!


தமிழ் வளர்க்கும் இதயத்தில் 
தான்வளரும் தெய்வம்!
அமிழ்தினும் இனியசொல்லாம் 
முருகனொரு தெய்வம்!
சொல்லுக்குப் பொருள்கூறி 
சுவைதந்த தெய்வம்! தான்
சொல்லாகிப் பொருளாகி 
சுவையுமான தெய்வம்!

குன்றத்தில் குடியிருக்கும் 
தெய்வம் எங்கள் தெய்வம்!
குறவள்ளி தனைமணந்த
தெய்வம் எங்கள் தெய்வம்!

உம் வாழ்வெனும் காவினுள்
 நலம்பெருகி அருமலர் மலர
நம் வயலூர் ஆனந்த
தெய்வமருள் செய்கவே!

வசந்தா பாபாராஜ்
(எழுதிய ஆண்டு 1971)


 


Post a Comment

0 Comments