போதை!

போதை!


தேவைக்கு மேலான 
தேடலும் போதைதான்
தேவைக்கு மேலுண்டால்
தேன் கூட போதைதான்

பட்டம்,பதவி மேல் கொண்ட
மோகமும் ஒரு போதைதான்
பணத்தின்மீது நீ கொண்ட
தாகமும் ஒரு போதைதான்

பெயருக்கும் புகழுக்கும்
அலைவதுவும் போதைதான்
பெருமைக்காய் மாயிடித்தால்
தருமம் கூட  போதைதான்

கண்டதுமே நீ கொண்ட
காதலும் ஒரு போதைதான்
கண்மூடித்தனமான 
காமமும் ஒரு போதைதான்

மதுவும் மர்ஐவானா 
மட்டுமே போதையல்ல
அளவிற்கு மிஞ்சினால்
அத்தனையும் போதைதான்

கல்ஹின்னை 
முஹம்மது ரியாஸ்


 


Post a Comment

Previous Post Next Post