தடம் பிறழாது வென்றிடு!

தடம் பிறழாது வென்றிடு!


உன்னைச் சுற்றிய உலகை அறிந்திடு
உன்னத வாழ்வைத் தேடியே அலைந்திடு
உண்மையை உரைத்தே எங்கும் வாழ்ந்திடு
உழைத்து உண்டிட எப்போதும் முயன்றிடு

அடித்துப் பறித்திடும் நோக்கைமறந்திடு 
அடுத்தவனையும் நல் வழிக்கே இழுத்திடு
அடிமைப் பயங்களை மறந்துவளர்ந்திடு
அச்சம் தவிர்த்து பிறருக்குஉதவிடு

கற்றிடும் பருவத்திலே திறமையாகக்கற்றிடு
கற்றவையைக் கொண்டு புதுமைகள்படைத்திடு
களவு பொய்களை நெருங்காது இருந்திடு
கசப்புண்டு உடலையும் காத்துமகிழ்ந்திடு

படிப்படியாய் சிந்தனையில் முன்னேறிச்சென்றிடு
பக்குபமாய்ப் பேசியே காரியத்தைமுடித்திடு
பச்சைக் கிளியாக இறக்கையைவிரித்திடு
பல அதிசையங்களை அறிந்திடவேபறந்திடு

மன்னனாக உலகினை வலம்வந்திடு
மடியேந்திய அன்னையைப் பெருமைப்படுத்திடு
மண்ணை நேசித்து நாட்டைச்சுவாசித்திடு
மற்றவர்களின் துயரத்திலும் பங்கிடஇறங்கிடு

உள்ளத் தூய்மையோடு உறவையும் பாராமரித்திடு
உதவிடும் மனப்பாங்கை மனதில்பதியமிடு
உறுதியான இதயத்தோடு போரிடத்துணிந்திடு
உந்தன் தடம் பிறழாது வென்றிடு
kala


 


Post a Comment

Previous Post Next Post