Ticker

6/recent/ticker-posts

Ad Code



எனக்குள் நான்...!


படபடக்கும் நொடிகளுக்கு
பல காரணங்களையும்
பல பயங்களையும்
சுருக்குப்பையில்
வெற்றிலையையும் பாக்கையும்
மறைத்து வைத்து
மீண்டும் குதைப்பலில்
சிவப்பென வண்ணமாக்கும்
அனுபவத்தின்
சிறு இதழ்வழியாகத்தான்
நான் பேசப்ப போகிறேன்....

ஒரு பக்கம் வழிந்தோடும்
காமரசங்களில்
சிறு படிகளை மோர்ந்து
அள்ளி பாதைகளெல்லாம்
நிரப்பி நகர்கிற தருணத்தில்
வழுக்கி விழும் அளவிற்கு
ஆசையின் மறுபறவியாக
இந்த காம்ம் சோதனை புரிகிறது...

தொடர்ந்த இழுத்து 
செக்கினைப் பதப்படுத்தி 
ஆட்டி எடுத்து
முதல் துளி எண்ணெயில 
மொத்த சூடும் கரைந்தோடிட
இன்னும் மூன்று சொட்டுகள் மீதமுள்ளது
விட்டுப்போன சூட்டுக் கனங்களின்
இரைகளை மொத்தமும் பறிகிடாத
அந்த ஒரு கேலிப்பொருளான
என்றென்றும்
எனக்குள் நான்......!

இதோ
புது சட்டை
பழைய பேச்சு
பரிதாப நிலை
ஆனால் நான் மட்டும் என்றும்
நானேதான்....

கவிஞர் சே கார்கவி
நாகப்பட்டினம்



 


Post a Comment

0 Comments