
கடந்த வாரத் தொடரில் இருந்து தாது உப்புக்களின் பணிகளைப் பற்றி ஒவ்வொன்றாக பார்த்து வருகின்றோம்.
அதில் முதலாவதாக இரும்பு சத்தை குறித்துபார்த்தோம்.
# ஹீமோகுளோபின் பல என்சைங்களில் முக்கிய கூட்டு பொருளாக விளங்குகின்றது திசுக்களின் சுவாசத்திற்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும் இரும்புச்சத்து மிகவும்தேவைப்படுகிறது.
# மிக முக்கியமான செய்தி என்னவென்றால் ரத்தத்தில் உள்ள சிவப்பு நிற அணுக்கள் 120 நாட்களுக்குப் பின்பு சிதைந்து விடுகின்றது.
# ஹீமோகுளோபினில் உள்ள இரும்புச்சத்து கழிவாக வெளியேற்றப்படாமல் புதிய ஹீமோகுளோபின் அதாவது ரத்தத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
# இரும்புச் சத்தானது நமது உடலில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
கால்சியம்
இரண்டாவதாக
நமது உடலில் மிக முக்கிய பங்காற்றி வருவது கால்சியம், இதை நாம் சுண்ணாம்பு சத்து என்றும் குறிப்பிடலாம்.
# உடலில் உள்ள சுண்ணாம்புச்சத்தில் #99 சதவீதம் எலும்புகளிலும் பற்களிலும் காணப்படுகின்றது. வலுவான எலும்புகளை உருவாக்கவும் பராமரிக்கவும் கால்சியம் தேவைப்படுகிறது.
# மூளைக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் இடையே ஆரோக்கியமான தொடர்பு பேணுவதற்கும் இது மிகவும் அவசியமாகிறது.
# உடலில் உள்ள தசைகளின் இயக்கத்திற்கும் தசைகள் சுருங்கிவிரிவதற்கும் உதவுகின்றது .
# கால்சியம் இருதயத்தின் செயல்பாட்டில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
# கால்சியமானது சோடியம் பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களுடன் சேர்ந்து தசை நரம்பு மண்டலங்கள் நன்கு இயங்க உதவுகின்றது
# கால்சியம் இன்னும் பல இயக்கங்களுக்கு உதவி புரிகிறது எனவே நாம் சுருக்கமாக பார்த்தோம் ..
நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை உறிஞ்சப்படுகிறது அப்படி உறிஞ்சப்படும் அளவும் அவரவர் உடலின் தேவையை பொருத்து மாறுபடுகிறது.
நமது உடல் ஏற்றுக்கொள்ளாததை நமது உடலால் ஊட் கிரகிக்க முடியாத கால்சியம் மலக்குடல் மூலமாக வெளியேற்றப்படுகிறது.
எனவே அதிக கால்சியம் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது எவ்வாறு கால்சியம் குறையும் பொழுது நோய் ஏற்படுகிறதோ அதேபோல அதிகரிக்கும் பொழுதும் நோய் ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் கால்சியம் நமது உடலில் உட்கரகிக்க அதாவது கால்சியம் உறிஞ்சப்பட சில வைட்டமின்கள் இன்றியமையாததாகின்றது.
புரதச்சத்து அதிக அளவு உட்கொள்ளும் போதும் , புரதத்திலுள்ள அமினோ அமிலம் சுண்ணாம்புச் சத்தை எளிதில் கரையக் கூடியதாக மாற்றி அமைக்கிறது . கால்சியம் எளிதில் உறிஞ்சப்படப் பல காரணிகள் உதவுவது போலவே வேறு பல காரணிகள் உறிஞ்சுதலைத் தடுக்கின்றன . வைட்டமின் டி குறைவுபடும்போது , கால்சியம் உறிஞ்சுதலும் குறைவுபடுகிறது .
அதிகமான கொழுப்புப் பொருட்களை உண்ணும்போது . கொழுப்பு அமிலங்கள் கால்சியத்துடன் இணைந்து கரையா சோப்புப் பொருட்களாக மாற்றுகின்றன . காரத்துடன் சேரும் போதும் கரையாத கால்சியமாக மாற்றப்பட்டு உறிஞ்சக்கூடிய தன்மையை இழக்கிறது . கால்சியம் பாஸ்பரஸின் விகிதமும் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கான முக்கிய காரணியாய் அமைகிறது . இவற்றின் விகிதம் மாறுபடும்போது இரண்டு தாது உப்புக்களின் உறிஞ்சுதலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு , கால்சியம் அல்லது பாஸ்பரஸ் அதிக அளவில் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது . குறைநோய்கள் சிறு குழந்தைகளின் உணவில் கால்சியம் குறைவுபடும் போது , அவர்களது பற்களிலும் , எலும்புகளிலும் கால்சியம் ( Decalcification of Bones and Teeth ) குறைவுபடுகிறது . அதனால் பற்களும் எலும்புகளும் மிருதுத் தன்மையை அடைகின்றன . கால்சியம் சரிவர இல்லையெனில் எலும்புகள் எளிதில் உடையக் கூடிய தன்மையை ( Softening of அடைகின்றன .
சிறு குழந்தைகளின் கால்கள் வளைந்து தொட்டிக்கால் , முட்டிக்கால் போன்ற அங்கவீனங்கள் ஏற்படுகின்றன . இவ்விதமான எலும்பு சம்பந்தப்பட்ட நோயை ரிக்கெட்ஸ் கால்சியம் ( Rickets ) என்று அழைக்கிறோம் . குறைவுபடும் போது . பெண்கள் இடைச் சுருக்கி நோயால் (Osteomalacia ) பெண்களுக்குக் ஆஸ்டியோபொரோஸிஸ் ஏற்படுகிறது . கால்சியம் குறைவுபடும் கர்ப்பிணிகளுக்கும் . தாய்மார்களுக்கும் சாதாரணப் பெண்களைவிட அதிக அளவு கால்சியம் ஒரு நாளைக்கு 04 பாலூட்டும் தேவைப்படுகிறது . சிறு குழந்தைகளுக்கு நல்ல உறுதியான எலும்பு வளர அதிக அளவு கால்சியம் தேவைப்படுகிறது உணவுகள் பால் , மோர் , பாலாடை போன்ற உணவுப் பொருட்களில் கால்சியம் உண்டு . அகத்திக்கீரை , அதிக அளவு முருங்கைக்கீரை , முளைக்கீரை , வெந்தயக்கீரை போன்ற கீரைகளிலும் மீன் வகைகளிலும் கேழ்வரகிலும் , எள்ளிலும் கால்சியம் அதிக அளவு உள்ளது . மாமிசம் . தானியங்களில் முக்கியமாக அரிசியில் கால்சியம் மிக மிகச் சிறிய அளவில்தான் இருக்கிறது . பாஸ்பரஸ் ( Phosphorus ) உள்ள நிலையில் எலும்புகளுக்கும் கால்சியத்தை அடுத்து , உடலில் அதிகமாயுள்ள தாது உப்பு பாஸ்பரஸ் ஆகும் .
இந்த தாது உப்பு குறித்து அடுத்த வாரத் தொடரில் நாம் காணலாம்
என்றும்......
வேட்டை வாசகர்களுடன் ....

டாக்டர் ஃபர்ஜானா பாத்திமா M.D(Acu).
தொகுப்பு :
உங்கள் குறள் யோகி,
தமிழ்ச் செம்மல்,
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)





0 Comments