Ticker

6/recent/ticker-posts

கொரோனா கொடூரம்.. ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு.. சீனா கொடுத்த ஷாக் விவரம்!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் 95 விழுக்காடு நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் சீனாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா பரவலைத் தடுக்க ஜீரோ கோவிட் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியது சீன அரசு. அதன்படி பல்வேறு முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, வணிக ரீதியிலான பாதிப்பும் அதிகரித்தது. இதையடுத்து ஊரடங்கை எதிர்த்து பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரவலாக நாடு முழுவதும் ஊரடங்கை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் ஊரடங்ககை திரும்ப பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது சீன அரசு. இதையடுத்து ஊரடங்கை விலக்கிக் கொண்டதோடு, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சீன அரசு கைவிட்டது. இதனால் சீனாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த் தொற்றால் பதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சீன அரசு முன்வரவில்லை. அதே நேரம் கொரோனா பாதிப்பின் உண்மை நிலவரத்தைக் கூட அந்நாட்டு அரசு வெளியிடவில்லை.

இப்போது முதல் முறையாக அந்நாட்டு அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின தேசிய சுகாதாரக் குழுவின் மருத்துவ விவகாரக் குழுவின் தலைவர் ஜியா யாகுய், கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் இந்த ஜனவரி 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 59, 938 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்தார். உயிரிழந்தவர்களில் 5,503 பேர் சுவாசம் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 54, 435 பேர் கோவிட் பாதிப்பு மற்றும் இணை நோய்களால் உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி சீன அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிக்கையின் படி வெறும் 37 பேர் மட்டும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு குறித்த உண்மையான தகவலை சீனா வெளியிடவில்லை என்றும், தன் நாட்டு மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பும், அமெரிக்க அரசும் வெளிப்படையாக குற்றம் சாட்டின.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை உலக சுகாதார அமைப்பின்  டைரக்டர் ஜெனரல் டாக்டர்.டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சியஸ் சீன நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மா ஜியோவெல்லை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து தான் சீன அரசு கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா மரணம் குறித்த விபரங்களை இப்போது வெளியிட்டுள்ளது. இன்னும் சீனாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளது.
SOURCE;news18



 


Post a Comment

0 Comments