Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-9

இப்படி ஒவ்வொருவரும் கூறும் போது இறுதி ஆளுக்கு முன்பாக ஒருத்தன் எழுந்து வந்தான் அவனைப் பார்த்தாலே சிரிப்பு வந்திடும் வத்தலும் தொத்தலுமாய் உடம்பு இருந்துச்சு   கையில் ஏதோ கீரை வகை மூலிகையும் வைத்திருந்தான்.  எழுந்து நின்றதுமே  வணக்கம் ஐயா வணக்கம் அம்மா என்றான் யாருக்கு வணக்கம் போட்டான் என்று யாருக்குமே புரியல சரி மௌனமாவே இருந்தார்கள். 

அவனே பேச ஆரம்பித்தான் நானு ஐயா ஆட்டுக் குட்டிக்கு கால் முறிஞ்சால் இதைத் தான் இடிச்சுக் கட்டுவேன்  அது மூன்று நாளிலே ச்சும்மா  யம் என்று துள்ளி ஓடும் என்றான்   மந்திரி சொன்னார் இங்கு ஆட்டுக் குட்டி இல்லையே என்று. இதைக் கேட்ட எல்லோரும் சிரித்தார்கள். 

அவன் தலையை சொறிஞ்சி  விட்டு சொன்னான்  ஆமா ஐயா ஆமா ஐயா எனக்கும் தெரியும் நான் செய்த வைத்தியத்தை சொன்னேன்.  என்றான்  

அருகே இருந்த பாதுகாப்பாளன் சொன்னான் இன்று நீ எங்க நாய்க்கு  இரை தான் என காதுக்குள்  . அதைக் கேட்ட கோமாளி வைத்தியன் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டான்  என் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியாமல் வந்துட்டேன் மகாராணி  என்னை ஒன்று செய்யாதீர்கள்   இது நானும் பொண்டாட்டியும் சாப்பிட வாங்கிய கீரை அவதா ஏதேதோ சொல்லி தந்து அனுப்பி வச்சா வரும் போது மறந்து போச்சு   என்று புலம்பி அழுதான் .

ராணி உட்பட எல்லோருமே சிரித்து விட்டார்கள்  ஏனைய வைத்தியர்கள் இவனைப் பார்த்து நச்சரித்தார்கள் அடேய் அடிமுட்டாள் உன்னால் எங்களுக்கும்  அவமானமாச்சுடா என்று உடனே ராணி சொன்னார் 

அவரை கூட்டிக் கொண்டு போய் தனியே அமர விடுங்கள் என. இதைக் கேட்டதும் தலையில் கை கூப்பி அழுதான் ராணியம்மா என்னை ஒன்றும் செய்யாதீர்கள்  என்னோடு வாருங்கள் என் பொண்டாட்டிதான் பொய் சொல்ல சொன்னாள் அவளிடம் கூட்டிக் கொண்டு போகிறேன்  நாக்கில் சூடு போடுங்கள்  என்னையும் அவள் தினம் திட்டுவாள் ராணியம்மா நான் சொல்வது உண்மை என்னை விடுங்கள் கொல்லாதீர்கள் என்று கதறினான் கிடந்து அவனின் அழுகை அடுத்தவர்களுக்கு கவலை  கொடுக்கவில்லை மாறாக எல்லோரும் சிரிக்கவே செய்தார்கள்  .

மகாராணி  அவனைப் பார்த்து கூறினார் நான் உன்னைக் கொல்லப் போவதாக சொல்லவேயில்லையே சரி நீ போய்வா என்றார்  அவன் கிறுக்கன் தானே ராணியைப் பார்த்து கேட்டான் போய் ஏன் வரவேணும்  போய்த்து போய்த்து அப்படியே போறேனே என்று  மந்திரி சொன்னார் ஆமாம் நீ போய்த்து போய்த்து போ சற்று நேரம் காத்திரு சாப்பாடு வரும் சாப்பிட்டதும் போ என்று கூறவே ஆஹா சிரித்தான் நீங்க தான் அழகா பேசுகின்றீர்கள் ஐயா நன்றி நான் போறேன்  என்றவன் ஏனைய வைத்தியர்களைப் பார்த்துக் கூறினான் நீங்க மாட்டித்திங்க நான் தப்பிச்சேன் பார்த்தீங்களா ? என சொல்லி நகர்ந்தான். 

(என பாட்டி கூறியதும்  பேரன் உதயன் கேட்டான் ஏன் பாட்டி அந்த வைத்தியர்கள் எல்லோரும் வைத்தியம் பார்க்கத் தானே வந்தார்கள்  ஆமாம் என்றார் பாட்டி  உதயன் சொன்னான் அப்போ ஏன் பாட்டி அவர்களைப் பார்த்து நீங்க மாட்டீத்திங்க என்றான்  எனக் கேட்டான் உதயன் அவனின் மூளை அவ்வளவுதான்  என்றார் பாட்டி  உதயனைப் பார்த்து அதற்கு சுமதிச் சித்தி சொன்னாள் பாவம் ஏழை அப்பாவி போல.  ஒன்றும் செய்யாமல் அனுப்பி விடவேனும் இறைவா எனக்கு கண்ணு கலங்குது  பசியோடு இருந்திருப்பான் என்றார் மேலும் சுமதி சித்தி  அதைக் கேட்டதும் பாட்டி சுமதி சித்தியை திரும்பிப் பார்த்துக் கேட்டார் ஏன்டியம்மா சுமதி மற்ற வைத்தியர்களுக்கு என்ன அறுசுவையோடு விருந்தா வைத்தார்கள் அவனுக்கு மட்டுமா பசி அங்கே இருந்த ஏனையோருக்கும் தான் பசி வந்திருக்கும் இது என்னடா புதுக் கதை சொல்றாள் இவள் என்றார் பாட்டி உடனே சுமதிச் சித்தி சொன்னார் இல்லை மாமி எனக்கு அந்த அப்பாவி வைத்தியரை நேராகவே பார்த்தது போல் ஒரு உணர்வு அதுதான் அப்படிக் கூறினேன் என்றார்  பாட்டி அடடா என்ற கையோடு கதையைக் கூற ஆரம்பித்தார்)
(தொடரும்)
கலா


 


Post a Comment

0 Comments