
குறள் 682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
ஒருத்தரு நல்ல தூதுவராக இருக்கது லேசுப்பட்டது இல்லை. அதுக்குன்னு சில தகுதிகள் இருக்கணும். மொதல்ல அன்பு. அடுத்தது அறிவு. மூணாவது பேச்சுத் திறமை.. இதுல்லாம் கண்டிப்பா வேணும் தம்பி.
குறள் 683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
தம்பி .. படிச்சவங்கள்லயே பெரிய வல்லாள கண்டனுவொ கொஞ்ச பேரு இருப்பானுவொ. எதிர் அணியில இருக்க ஆளுங்களை இழுத்துட்டு வரணும்னா, அவொகிட்ட போயி தங்களோட அருமை பெருமைகளை அள்ளி விட்டு அவொ எல்லாத்தியும் சரிக் கட்டிருவானுவொ தம்பி.
குறள் 684
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
தம்பி.. தூதுவரா போறதுல்லாம் அத்தனை லேசுப்பட்டதில்லை. நல்ல அறிவு, சிறந்த நடையுடை பாவனை, எதையும் நல்ல ஆராஞ்சு பாக்கக் கூடிய திறமை, இந்த மூணும் இருக்கவந்தான் தூதுவனா போக முடியும் தம்பி.
குறள் 687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
தம்பி.. ஒரு சிறந்த தூதுவன் எப்படி இருப்பான் தெரியுமா? மொதல்ல அவனோட கடமை என்ன? அதை செய்ய வேண்டிய காலம் எப்பொ? எங்கே வச்சு சொல்லணும், எப்படிச் சொல்லணும்னு நல்ல யோசிச்சுச் செய்வான் தம்பி.
குறள் 688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
தம்பி.. தூது போகக் கூடியவன் ஒழுக்கமானவனா இருக்கணும். அவனுக்கு மேலிடத்தின் முழு ஆதரவு எப்பமும் இருக்கணும். கூடவே துணிச்சலும் இருக்கணும். இதுதான் அவங்கிட்ட இருக்கவேண்டிய பண்பு.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments