
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா ஓரளவு ரன்கள் சேர்த்தார். அவர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஷர் படேல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய கே எல் ராகுல் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
குல்தீப் யாதவ் வின்னிங் ஷாட் அடித்து கொடுக்க இந்திய அணி 43,2 ஓவர்களில் 6 விக்கெட்டு இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதோடு, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்று கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 15 ஆம் தேதி திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது.
இந்த நிலையில், இது வரையில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது. இதுவரையில் இலங்கை அணி 437 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதே போன்று இந்தியாவும் 436 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. பாகிஸ்தான் 419 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE;asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments