
எனது வலிகளை
விளக்கப்படுத்தினேன்
வாதிட்டேன்
வனாந்தரத்தின்
அடரிருளில்
கண்களின்
கண்ணீரைத் தொலைத்தேன்
வலிகளை
உணர்ந்து கொள்ளும்
வழிகள்
உன்னிடம்
புலப்படவில்லை
பூமியைத் துளைத்து
வெளிவந்து
மீண்டும் பூமிக்குள்
சென்று புதைந்து விடுகிற
மண்புழுவைப்போல்தான்
நீயும்
உன் புரிதலின்மையும்
உன்னாலான ரணமும்..
தொலையும் நேசங்கள்
தொடர்ந்த வண்ணம்..
விதண்டாவாதங்கள்
வேண்டாவிட்டாலும்
மேடையேறி
தன்னாதிக்கக்
கொடியேற்றும்
ஆதலால்
எனக்குத் தெளிவாகி விட்டது
எனக்குப் புலப்பட்டு விட்டது
நிறுத்தம்
வருவதற்கும்
நிறுத்தப்படுதற்குமிடையிலான
வித்தியாசம்
உடைந்து நொறுங்குமுன்
முந்திக் கொண்டு
விலகிக்கொள்கிறேன்
எனக்கு
சமாதானப் பூக்களே
வேண்டும்!
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments