
இந்த சதத்த்தின் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த என்ற வீரர் என்ற பெமையை விராட் கோலி தன்வசப்படுத்தி உள்ளார். இதற்கு முன் சச்சின் இலங்கை அணிக்கு எதிராக 8 சதமடித்து இருந்தார். தற்போது விராட் 9 சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
அதே போல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக 9 சதங்களை விளாசியுள்ளார் விராட். இதன் மூலம் இரண்டு எதிரணிகளுக்கு எதிராக 9 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 9 சதங்கள் அடித்து இருந்தார். ஆனால் விராட் இரு அணிகளுக்கு எதிராக 9 சதங்கள் அடித்துள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக சதம் அடித்த வீரர் என்ற வீரராக சச்சின் (20) இருந்தார். ஆனால் இன்று கோலியும் 20வது சதத்தை அடித்து அவரை சமன் செய்தார். இந்த சாதனையை சச்சின் 160 இன்னிங்சில் அடித்த நிலையில், விராட் கோலி 61 இன்னிங்ஸ் குறைவாக அதனை சமன் செய்துள்ளார்.
SOURCE;news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments